வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

2023-ல் மூன்று பிசினஸ் தொடங்கி கொடி கட்டி பறக்கும் நயன்.. மிக்ஞாம் புயலுக்கு செய்த உதவி தெரியுமா?

Nayanthara Business: சினிமாவில் ஒரு சில நடிகைகள் கோடி கணக்கில் சம்பாதித்தாலும், கையில் இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தோற்றுப் போய் விடுவார்கள். இந்த விஷயத்தில் நடிகை நயன்தாரா படு உஷார். இருக்கும் வரை, தன்னால் முடிந்த வரை ஓய்வில்லாமல் உழைத்து கோடி கணக்கில் சம்பாதிக்க தொடங்கிய இவர், முன்னணி ஹீரோயின் லிஸ்டிலும் தாக்கு பிடித்தார்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை போல் கையில் இருக்கும் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் நயன். கடந்த சில வருடங்களுக்கு முன் டீ பிசினஸில் முதல்முறையாக தன்னுடைய முதலீட்டை போட்டார். அதைத்தொடர்ந்து லிப் பாம் கம்பெனியை தொடங்கி தொழிலதிபராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார்.

Also Read:வாயால் வாழ்ந்துகெட்ட 5 நடிகைகளின் சோகக் கதை.. விவாகரத்தே மேல் என பிடித்ததை விட மறுத்த அமலாபால்

திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று கதறி கொண்டிருந்தவர்கள் வாயை பிளக்கும் அளவுக்கு இந்த வருடம் அடுத்தடுத்து மூன்று நிறுவனங்களை தொடங்கி சாதனை படைத்திருக்கிறார் நயன். தொட்ட இடமெல்லாம் துலங்கும் என்பது போல் அவருடைய முதலீடுகள் எல்லாம் இப்போது கை மேல் பலன் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா தொடங்கி இருக்கும் மூன்று நிறுவனங்கள்

நயன்தாரா 9 ஸ்கின் என்னும் பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதன் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது இதன் முதல் கட்டமாக சினிமா துறையில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இந்த அழகு சாதன பொருட்கள் எல்லாம் இருக்கும் பேக்கேஜை இலவசமாக கொடுத்து நல்ல விமர்சனங்களை பெற்றார்.

அதைத்தொடர்ந்து டிவைன் ஃபுட்ஸ் என்னும் நிறுவனத்திலும் முதலீடு செய்து இருக்கிறார். இயற்கையான உணவுப் பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் சமீபத்தில் தொடங்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. இதை கருத்தில் கொண்டு சரியான இடத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி.

அழகு சாதன பொருட்கள் மட்டும் இல்லாமல் பெண்களின் அத்யாவசிய தேவையான நாப்கின் தொழிலையும் தொடங்கி இருக்கிறார் நயன். பெமி9 என்னும் பெயரில் இயற்கையான முறையில், எந்த கெமிக்கலும் சேர்க்காத நாப்கின்களை தயாரிப்பதாக நயன் அறிக்கை விட்டிருந்தார். சமீபத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நாப்கினை இலவசமாக கொடுத்து வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்.

Also Read:படுக்கையை பகிர்ந்து கொண்டவர் வாழ்க்கையை பகிரவில்லை.. பிரபல நடிகரின் மீது செம கோபத்தில் கங்கனா ரணாவத்!

 

 

 

 

 

 

Trending News