வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

உச்சகட்ட பயத்தை காட்டிய நயன்தாராவின் கனெக்ட்.. கல்லா கட்ட வாய்ப்பு இருக்கா.? திரைவிமர்சனம்

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கி கோலிவுட்டிலும் ஹாலிவுட் தரத்தில் ஹாரர் படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்தவர் இயக்குநர் அஸ்வின் சரவணன். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இன்று ரிலீசாகி இருக்கும் கனெக்ட் திரைப்படத்தில், கொரோனா காலகட்டத்தில் தனது மகளுக்கு பிடித்த பேயை நயன்தாரா எப்படி ஓட்டுகிறார் என்பதை திகில் கலந்து பயமுறுத்தி இருக்கிறார்.

கொரோனோ லாக் டவுன் நாடு முழுவதும் போடப்பட்டிருந்த நிலையில் தனித்தனியாக சிக்கிக்கொண்ட கிறிஸ்தவ குடும்பத்தினர் வீடியோ கால் மூலம் கனெக்ட் ஆகின்றனர். படத்தில் டாக்டராக நடித்திருக்கும் வினய் கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் போது, அவரும் கொரோனா வைரஸ் தாக்கி இறந்து விடுகிறார்.

Also Read: மாயா பட எதிர்பார்ப்பை நயன்தாராவின் கனெக்ட் பூர்த்தி செய்ததா.? பயமுறுத்தும் ட்விட்டர் விமர்சனம்

இதன் பின் பாசமாக வளர்ந்த மகள் அப்பாவுடன் பேச வேண்டும் என, மந்திரவாதியை தேடி சென்று பயங்கர ஆவியின் பிடியில் மாட்டிக் கொள்கிறார். இதனால் கணவரை இழந்து மகளின் நிலையை பார்க்க முடியாத சூசன் கேரக்டரில் நடித்த நயன்தாரா எப்படி மகளைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த கனெக்ட் படத்தின் கதை.

99 நிமிடம் ஓடக்கூடிய இந்த படம் ஹாரர் பிரியர்களுக்கு சரியான தீனியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அத்துடன் படம் பார்ப்போரை பயமுறுத்தியே ஆக வேண்டும் என இயக்குனர் அஸ்வின் சரவணன் மெனக்கெட்டு நிறைய வேலைகளை செய்திருக்கிறார்.

Also Read: கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய விக்கி-நயன் ஜோடி.. மீடியா முன் கிழித்தெறிந்த ஜிபி முத்து

அதிலும் நயன்தாரா கொரோனா காலகட்டத்தில் கணவரை இழந்து தவிக்கும் காட்சிகள் மற்றும் ஆதரவாக இருந்த மகளும் பேய் பிடித்து கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல், போராடும் தாயாக லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிரட்டி விட்டிருக்கிறார். அதிலும் ஏகப்பட்ட நீண்ட நேர சிங்கிள் ஷார்ட் காட்சிகளில் நிஜமாகவே தனது நடிப்பு திறமையை அட்டகாசமாக வெளிக்காட்டி இருக்கிறார் நயன்தாரா.

அத்துடன் இந்த படத்தில் நயன்தாராவின் அப்பாவாக வரும் சத்யராஜின் நடிப்பு, வினய் உடைய நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆகவே அமைந்தது. இருப்பினும் கனெக்ட் படத்தின் கதை மட்டும் சரி செய்து புதுவிதமாக கொடுத்திருக்கலாம் அத்துடன் கிளைமாக்ஸிலும் அதிரடி டிரஸ்ட் வைத்திருந்தால் நிச்சயம் கனெக்ட் பாக்ஸ் ஆபிஸில் ஏகப்பட்ட கலெக்ஷனை குவித்திருக்கும்.

Also Read: இதனால தான் ஆடியோ பங்ஷனுக்கு போறதில்ல.. 20 வருட அனுபவத்தை கூறிய லேடி சூப்பர் ஸ்டார்

இந்த படம் ஹாலிவுட் படம் பார்க்கும் ஃபீல் கொடுத்தாலும் மாயா படம் அளவிற்கு ஹாரர் இல்லை. அத்துடன் இன்டர்வெல் பிளாக் மட்டும் இல்லையென்றால் இன்னும் படம் சூப்பராக இருந்திருக்கும். இருப்பினும் பேய் பட விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த படத்தை தியேட்டரில் ஒரு முறை பார்த்து திகில் அடையக்கூடிய படமாகவே பார்க்கப்படுகிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5

- Advertisement -spot_img

Trending News