ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பழைய காதலனுக்கு கிடைச்ச சான்ஸ்.. மூஞ்சிய கூட பார்க்காத நயன்தாரா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இத்திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் காட்பாதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் நடிகர் மோகன்லால்,பிரித்விராஜ் நடிகை மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்த லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆன காட்பாதர் திரைப்படத்தில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இணைந்துள்ளார்.

மேலும் முன்னணி நடிகர்களின் திரை படங்களில் நடன கலைஞராகவும் பணியாற்றிவரும் பிரபுதேவா தற்போது காட்பாதர் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஆட்டம் போடச் சொல்லிக் கொடுக்கப் போகிறார். இதனிடையே நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் ஏதும் மலர்ந்திடுமா என்ற கேள்வி தற்போது திரை வட்டாரத்தில் வெளியாகியுள்ளது.

நயன்தாரா மீது காதல் கொண்ட பிரபுதேவா, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. பின்னர் நயன்தாராவும் தன் கைகளில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி இருந்தார். பின்னர் யார் கண்ணு பட்டுச்சோ என்று தெரியவில்லை, திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து சென்றனர். இதனிடையே நயன்தாரா தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதேபோல பிரபுதேவாவும் படங்களை இயக்குவதிலும், நடனக் கலையிலும் கவனத்தை ஈர்த்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் ஆகியுள்ள நயன்தாரா கண்டிப்பாக பிரபுதேவாவின் பக்கம் சாய மாட்டார் என்று உறுதியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் காலங்கள் மாற மாற காதலும், மனமும் மாறிவிடும் என்பது போல, நயன்தாராவை தற்போது மிகப்பெரிய உச்சியில் கொண்டு சென்ற விக்னேஷ் சிவனை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று தீர்க்கமாக உள்ளனர் திரை வட்டாரத்தில் உள்ளவர்கள்.

Trending News