வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாரா இடத்தை பிடிக்க ஆசைப்படும் 5 நடிகைகள்.. திருமணத்திற்குப் பின்னும் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா உலகெங்கும் கொடிகட்டி பறந்து வந்த நிலைமை சற்று இப்பொழுது குறைந்து வந்தது. காரணம் மற்ற மொழி திரைப்படங்களின் வெற்றி. அதனை மாற்றி அமைத்தது விக்ரம் திரைப்படம். அடுத்து இப்பொழுது வேறு பிரச்சனை கோலிவுட்டில் நிலவுகிறது. நயன்தாரா இருக்கும் வரை இந்த பிரச்சினை வரவில்லை. இவர் என்று திருமணம் செய்து சென்றாரோ அன்றிலிருந்து இந்த பிரச்சினை பெரிய பிரச்சினையாக கோலிவுட்டில் பார்க்கப்படுகிறது.

தற்போது இருக்கும் சூழலில் தமிழ் சினிமாவில் நயன்தாரா சென்ற பிறகு அவர் இடத்தை பிடிக்க ஒரு சில நடிகைகளே போட்டி போட்டு வருகின்றனர். காரணம் கதாநாயகிகளின் பற்றாக்குறை. திரிஷா, சமந்தா, பூஜா ஹெக்டே, சாய் பல்லவி இவர்களைத் தவிர சொல்லும்படி வேற யாரும் தமிழ் சினிமாவில் இல்லை. ரசிகர்கள் தாங்கள் ரசித்த கதாநாயகிகள் இருப்பார்கள் என்று நினைத்த வேளையில் காணாமல் போன முக்கிய கதாநாயகிகள் சிலர்.

கீர்த்தி சுரேஷ்: திடீரென சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து மளமளவென அனைத்து முக்கிய ஹீரோக்களுடனும் நடித்து கோலிவுட்டில் நல்ல இடத்தை பிடித்தார். பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பின்னர் அழகிற்காக உடல் மெலிந்து காணப்பட்டார். ஆனால் அது அவருக்கு சினிமா உலகில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தியது. இவர் 3,4வருடங்களில் ஒரு வெற்றியும் தமிழ் சினிமாவில் இல்லை. அதை தெலுங்கிலும் சரி, மலையாளத்திலும் சரி, எங்கு சென்றாலும் தோல்வி முகம் இனிமேல் இவர் நடிப்பதை விட்டு திருமண வாழ்க்கை ஈடுபட போவதாக செய்திகள் வருகின்றன.

Also read: பிரபல நடிகருக்கு வலை விரிக்கும் கீர்த்தி சுரேஷ்.. பொறாமையில் பொங்கும் சக நடிகைகள்

அதிதி சங்கர்: தற்போது ஒரே படத்தில் மிகப்பெரிய பெயரை பெற்று இருக்கிறார். நன்றாக நடிக்கிறார், நன்றாக நடனம் ஆடுகிறார், என்ற திறமைகள் இருந்தாலும் ஏதோ ஒன்று கதாநாயகிகளுக்கான சில விஷயங்கள் அவர் முகத்தில் இல்லை என்பதால் இன்னும் ஒரு சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இருந்து விடை பெறுவது என்பது நிச்சயம். இல்லையென்றால் குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க கூடியவராக மாறுவார். இவரது வருகை சினிமாவிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரியவில்லை.

காஜல் அகர்வால்: நன்றாக சினிமா மார்க்கெட் இருக்கும் பொழுது நல்ல முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். திடீர் என்று இவர் திருமணம் செய்து இன்று குழந்தையைப் பெற்றுவிட்டார். இதனால் இந்தியன்-2வில் நடிக்க முடியாமல் போனது. இனிமேல் கதாநாயகியாக நடிப்பது சந்தேகம் என்ற அடிப்படையில் இவரும் இன்று சினிமாவில் இல்லை.

Also read: விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்த சமந்தா.. பல வருடமாக வாசலில் நின்று புலம்பும் நிலை

தமன்னா: 20 வருடத்திற்கு மேல் சினிமாவில் இருக்கும் இவர் ஒரு சில வெற்றிகளை கொடுத்துக் வந்துள்ளார். தமிழில் பெரிய ஹீரோபடத்தில் நடித்திருந்தாலும் வெற்றியை தொடர முடியவில்லை. பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய புகழின் உச்சிக்கு சென்ற தமன்னா அதன்பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். மார்க்கெட் இல்லாமல் தவிக்கும் தமன்னா தற்போது புது முயற்சியாக ரஜினி நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க போகிறார். என்னதான் நடித்தாலும் மறுபடியும் கதாநாயகியாக நடிப்பது என்பது ஏற்புடையதாக இருக்காது என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: சிறு சிறு வேடங்களில் நடித்து மிகப்பெரிய தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஆனால் முக்கிய கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடிக்காமல் இருப்பது இவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து தெலுங்கு பக்கம் சென்று விட்டார். மீண்டும் வந்தாலும் கதாநாயகியாக நடிக்க முடியாது குணச்சித்திர வேடங்கள் மட்டுமே நடிக்க முடியும்.

Also read: மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.. சபாஷ், சரியான முடிவு!

இப்படி என்று கோலிவுட்டில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஹீரோயின்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் நினைத்து இருக்க மாட்டார்கள். நயன்தாரா சென்றாலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்ற பெயரை நயன்தாரா தக்க வைத்துக் கொள்வார் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. திடீரென ஏதோ ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே இதனை எல்லாம் மாற்ற முடியும். ஆனால் கதாநாயகிகள் இல்லாமல் இருப்பது ரசிகர்களை ஏமாற்றத்துடன், வருத்தத்துடன் இருக்க வைக்கிறது.

Trending News