புதன்கிழமை, ஜனவரி 8, 2025

எல்லாத்துக்கும் காரணம் நயன்தாரா  வாய்தான்.. கொளுத்தி போட்டு குளிர் காயும் அற்புதமான ஜோடி

Nayanthara and Vignesh Shivan misused social media: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் கெத்தாக வலம் வருபவர் நயன்தாரா. சிறந்த கதை அம்சத்துடன் கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவிற்கு அவர் எதிர்பார்த்ததை போல் படங்கள் கை கொடுக்காமல் போகவே கணவருடன் இணைந்து இங்கிதமற்ற பல தந்திரமான வேலைகளை செய்து வருகிறார் இந்த அன்னபூரணி.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி விமர்சன ரீதியாக ஓரளவு பெயர் வாங்கினாலும், வசூல் ரீதியாக நயன்தாராவிற்கு கொடுத்த சம்பளத்தை கூட எட்ட முடியாமல் மாபெரும் தோல்வி அடைந்து  பின்வாங்கியது. இருந்த போதும் தனது சம்பள விஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளவில்லை நயன்தாரா. 

போதாத குறைக்கு இவரின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிக்கும் படமோ ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி,  தலைப்பு முதல் தயாரிப்பாளர் வரை பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

Also read: நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலில் மிரட்டும் திரில்லர்

இதை வைத்து பார்க்கும் போது இந்த நட்சத்திர ஜோடிகள் ரீல் வாழ்க்கை அந்தரத்தில் உள்ளது. “டேக் இட் ஈசி பாலிசி” என எதையும் கண்டு கொள்ளாமல் வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் வேலையை தவறாது செய்யும் நயன்தாராவின் இன்ஸ்டாவில் விக்கி அன்  ஃபாலோ செய்யப்பட்டிருந்தார்.  

வெறும் வாய்க்கு அவல்பொரிபோல், ரசிகர்கள் ”என்ன விவாகரத்தா?” என்று கேள்விக்கணை தொடுக்க அதற்கான பதிலை நெருக்கமுடன் இருந்த புகைப்படங்களை பதிவிட்டு சரி செய்தார். இவர்களது இந்த புகைப்படமும் வீடியோவும் பார்ப்பவரை முகம் சுளிக்க வைத்தது. 

 இது மட்டும் இன்றி  அடுத்ததாக சில தினங்களுக்கு முன்பாக “ஐ அம் லாஸ்ட்” என்ற போஸ்டரை போட்டு ரசிகர்களை அலற விட்டார். பிரிவை கன்ஃபார்ம் செய்த ரசிகர்கள், அடுத்த இவர்களது பதிவை எதிர்நோக்கி இருக்க, நயன் மற்றும் விக்கி இருவரும் விமானத்தில் தன் குழந்தைகளுடன் தாங்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு விளையாட்டு காட்டி வருகிறார்கள். சர்ச்சை ஏற்படுத்தி சபலங்கள் பண்ணும் இந்த நட்சத்திர ஜோடியின் அலம்பல்களை கண்டு கசந்து போய் உள்ளனர் ரசிகர்கள். 

Also read: சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா பண்ணும் அக்கப்போரு.. விசாரித்ததில் வெளிவந்த லேடி சூப்பர் ஸ்டாரின் தங்க மனசு

Trending News