வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஓ கதை அப்படி போகுதா! தனுஷ்-க்கு தெரியாமல் திருட்டுத்தனம்

நெட்ஃபிளிக்ஸில் வெளியானது, ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம். அம்மணி எப்படியோ தனுஷ் பெயரை பயன்படுத்தி, பயங்கரமாக ப்ரோமோஷன் செய்து தனது ஆவணப்படத்தை ட்ரெண்டிங் நம்பர் 1 ஆக மாற்றிவிட்டார். தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் மிகவும் மோசமானதாகவே இருக்கிறது.

இந்த நிலையில், தனுஷ் இதுவரை இதற்க்கு பதிலளிக்கவில்லை. அவர் லீகளாக மூவ் செய்துகொண்டிருக்கிறார். தற்போது தனுஷ் தரப்பினர் ஒரு சிலர் நயன்தாராவை பற்றி சொல்லும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால், தனுஷ்-க்கு தெரியாமல் சில பல வேலைகள் நயன்தாரா செய்ய முயற்சித்துள்ளார். அது தெரியவர, தனுஷ் இப்படி நடந்துகொண்டுள்ளார்.

தனுஷ்-க்கு தெரியாமல் திருட்டுத்தனம்..

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம், என்று நயன்தாரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் NOC வாங்க முயற்சி செய்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவர் சென்ற ரூட் ரொம்ப தவறானதாக உள்ளது. wonderbar நிறுவனத்திடம், முக்கியமாக producer தனுஷிடம் தானே, இந்த தடையில்லா சான்றிதழ் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நயன்தாரா, தனது ஈகோ பிரச்சனை காரணமாக தனுஷிடம் கேட்கவில்லை.

அதற்க்கு பதிலாக wonderbar நிறுவனத்தின் அதிகாரிகள் ஒரு சிலரிடம், தனுஷுக்கு தெரியாமல், இந்த தடையில்லா சான்றிதழை வாங்கி தருமாறு கேட்டிருக்கிறாராம். இது தனுஷுக்கு தெரிய வர, அவர் இப்படி இழுத்தடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தனுஷ் தரப்பிலிருந்து, ஏதாவது அறிக்கை வெளியானால் மட்டும் தான் உண்மையில் என்ன பிரச்சனை என்பது தெரியவரும்.

Trending News