வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நயன்தாரா பெயரை வைத்து ஏமாற்றிய தயாரிப்பாளர்.. இப்படி ஒரு விளம்பரம் தேவையா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது இயக்குனர் ஷங்கரின் முதல் படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஆக்சன் கிங் அர்ஜுன், கதாநாயகியாக மதுபாலா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை குஞ்சுமோன் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக போட்டிகள் வைத்து குஞ்சுமோன் பரிசும் வழங்கினார். இப்படத்தில் பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் யார் என்பதற்கு இவ்வளவு பில்டப் கொடுத்த நிலையில் நடிகை யாராக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்தனர்.இப்படத்தில் ஹீரோயின் தேர்வில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதேபோல் தயாரிப்பாளர் இப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவலையும் கூறினார். இதனால் பலரும் நம்ப நயன்தாராதான் இப்படத்தில் நடிக்க உள்ளாராம் என்று ஆச்சரியத்தில் இருந்தனர். ஆனால் இப்படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி என்ற நடிகை நடிக்க உள்ளாராம்.

nayanthara chakravarthy committed for gentleman2 movie
nayanthara chakravarthy committed for gentleman2 movie

இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளாராம். ஜெண்டில்மேன் 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் வேண்டுமென்றே நயன்தாரா பெயரின் பப்ளிசிட்டிக்காக இந்த நடிகை தயாரிப்பாளர் தேர்வு செய்தாரா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இப்படி கூட பிரமோஷன் செய்ய வேண்டுமா என விமர்சித்து வருகின்றனர்.

Trending News