ஜெயிக்க முடியலன்னு முத்தம், பெட்ரூம் காட்சியில் தாராளம் காட்டும் இளம் நடிகை.. நயன்தாராவுக்கே போட்டின்னு சொன்னீங்க!

Tamil Young Actress: ஹோம்லி நடிகை என தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த ஹீரோயின் இப்பொழுது எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என சகட்டுமேனிக்கு படத்தில் நடித்து தள்ளுகிறார். அப்படி நடித்து தள்ளியும் அவருக்கு உரிய கௌரவம் கிடைக்க வில்லை என்று இப்பொழுது வேறு ரூட்டை கையில் எடுத்துள்ளார்

அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புக்காகவும், இனிமேல் நிறைய வாய்ப்புகள் வேண்டும் என்றும் இப்பொழுது குளியலறை, பெட்ரூம் காட்சிகளில் தாராளம் காட்டி வருகிறார். முதலில் சின்னத்திரையில் என்ட்ரிகொடுத்து ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்பட்டவர் தான் வாணி போஜன்.

Also Read: வாணி போஜன் போல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அவமானம்.. விக்ரம் படத்தால் அடுத்தடுத்து விழும் பெரிய அடி

இவர் சமீபத்தில் நடிகர் பரத்தின் ஐம்பதாவது படமான லவ் என்ற திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வாணி போஜன் கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் நயன்தாரா மாதிரியே இருக்கிறாய் என பெயர் எடுத்தவர் வாணி போஜன்.

அதன் பின் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு முன்னேறியதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு போட்டி இவர்தான் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இப்போது அடுத்தடுத்த வாய்ப்புக்காக கிளாமர் நடிகையாக கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் மாறிவிட்டார்.

Also Read: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பரத்.. ஜெயம் ரவியால் கேரியர் போச்சு என புலம்பல்

இவர் சோசியல் மீடியாவிலும் கண் கூசும் அளவுக்கு புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் ஹோம்லி நடிகை என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதை எல்லாம் இப்போது சுத்தமாகவே துடைத்து தூர வீசுவிட்டார்.

அதிலும் லவ் படத்தில் பரத்துடன் முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் தாராளம் காட்டி நடித்திருப்பதை பார்த்ததும் வாணி போஜனா இது! என்று பலரும் வாயடைத்து இருக்கின்றனர். அது மட்டுமல்ல இது போன்ற கதாபாத்திரங்களை இனி நடிக்கவும் தயார் என சோசியல் மீடியாவிலும் தன்னுடைய கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

Also Read: சீரியல் நடிகை என ஒதுக்கிய ஹீரோக்கள்.. தேடி வர வைத்து முகத்தில் கரியை பூசிய வாணி போஜன்

- Advertisement -