திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

தயாரிப்பாளர்களை ஓடவிடும் நயன்தாரா.. ஜெட் வேகத்தில் செட்டிலாக போடும் பக்கா திட்டம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்ததன் மூலம் கால் பதித்தவர் நடிகை நயன்தாரா. இவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஏகப்பட்ட ரசிகைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரைத் துறையில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவருக்குத்தான் முதலிடம். அத்துடன் இவர் சம்பள விஷயத்தில் யாராலும் இவரை நெருங்க கூட முடியவில்லை.

இவர் தல அஜித்தின் அடுத்த படமான AK 62 படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப்படத்தை இவருடைய காதலன் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இருப்பினும் அஜித்தின் அடுத்த படம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் நயன்தாரா அந்தப் படத்திற்கான சம்பளத்தை 10 கோடி ஆக ஆக்கிவிட்டார் என பேச்சு அடிபட்டது.

மேலும் அது 10 கோடி இல்லை. அதற்கும் மேல் என நெருங்கிய வட்டாரங்கள் பேசுகின்றன. அதாவது நயன்தாரா AK 62படத்திற்குப் பிறகு கமிட்டாகும் படங்களுக்கு 15 கோடி சம்பளத்தை ஏற்றி விட்டார்.

இவ்வாறு பேசிக்கொண்டே இருக்கும்போது சம்பளத்தை ஏற்றுகிறார் என தயாரிப்பாளர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்கவே பயப்படுகின்றார்கள். அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் சம்பளத்தை ஏற்றுக்கொண்டே போகிற நயன்தாரா வேண்டவே வேண்டாம் என தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகின்றனர்.

எனவே மார்க்கெட்டில் பீக்கிள் இருக்கும் நயன்தாரா அதை குறைத்துக் கொள்ளாமல், தற்போது காதலன் விக்னேஷ் சிவத்துடன் லிவிங் டுகெதர் லைஃபில் இருந்தால் தப்பித்து விடுவார். ஆனால் திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் அவரால் இப்படி, பல மடங்கு சம்பளத்தை உயர்த்த முடியாது. அதனால் செட்டிலாக ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்தி  வருகிறார்.

Trending News