புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

நயன்தாரா படத்துக்கு ஏற்பட்ட புது சிக்கல்.. அந்தஸ்து குறைந்து ரிலீசுக்கு வருகிற ஆபத்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு கடைசியாக ஓடிய படம் எது என்பதே மறந்திருக்கும். அந்த அளவிற்கு மோசமான பிளாப் படங்களை கொடுத்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்துக்கு பிறகு எந்த படமும் இவருக்கு நன்றாக அமையவில்லை. இப்பொழுது கைவசம் ஆறு படங்கள் வைத்திருக்கிறார்.

2021 அண்ணாத்த திரைப்படத்திலிருந்து 2024 அன்னபூரணி படம் வரை இவர் நடித்த அனைத்து படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இறைவன், காத்து வாக்கில் இரண்டு காதல், கனெக்ட், காட்பாதர் என இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அத்தனையும் பிளாப் தான்.

இதனால் இவரது படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் அச்சப்படுகின்றனர். தற்போது இவர் நடித்து முடித்துள்ள படம் “டெஸ்ட்”இந்தப் படத்தையும் இப்பொழுது OTTடியில் தான் ரிலீஸ் செய்ய போகிறார்களாம். நயன்தாராவின் அந்தஸ்து இப்பொழுது OTT லெவலுக்கு வந்துள்ளது.

கடைசியாக நயன்தாராவிற்கு 2023 ஆம் ஆண்டு அன்னபூரணி படம் தான் தியேட்டரில் வந்தது. அதன்பிறகு இவருக்கு படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இவரின் கல்யாண வீடியோ கூட netflixயில் ஒளிபரப்பப்பட்டது. அதுவும் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

தமிழில் டெஸ்ட் மற்றும் ராக்காயி படங்கள்தான் இவர் கையில் இருக்கிறது. மலையாளத்தில் மூன்று படங்களும், கன்னடத்தில் ஒரு படமும் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவருக்கு ரிலீஸ் ஆகும் டெஸ்ட் படத்தில் மாதவன், சித்தார்த்த, மீரா ஜாஸ்மின் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கின்றனர்.

Trending News