திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சமந்தாவிற்கு, நயன் கொடுத்த அன்பு பரிசு.. பொறாமையில் பொங்கும் சக நடிகைகள்

நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் . இப்படத்தை நயன்தாராவின் காதலராக விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் பல நடிகைகள் இணைந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தனர். ஆனால் சமீபகாலமாக எந்த ஒரு நடிகையும் இணைந்து படங்கள் நடிப்பதில்லை காரணம் இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஏதாவது ஒரு நடிகைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அவருக்கு மட்டுமே காட்சிகள் பெரிய அளவில் வைக்கப்படும் என்பதற்காக பல நடிகைகள் நடிக்க மறுத்து வந்தனர்.

ஆனால் நயன்தாரா இன்று நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். அதேபோல் சமந்தாவும் நம்பர்-ஒன் நடிகையாக இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து படங்கள் நடிக்க மாட்டார்கள் என பலரும் பல்வேறு விதமாக கூறிவந்தனர். ஆனால்இவர்கள் இருவரும் தங்களுக்குள் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் ஒன்றாக இணைந்து படத்தில் நடித்து முடித்துள்ளனர்.

காத்துவாக்குல 2 காதல் படப்பிடிப்பு இன்று முடிவடைந்ததை அடுத்து நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி உட்பட அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது நயன்தாரா சமந்தாவிற்கு ஒரு அழகான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது சமந்தாவிற்கு விலைமதிப்புள்ள கம்மல் ஒன்றை கொடுத்துள்ளார்.

nayanthara
nayanthara

இதனை சமந்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும்  படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவங்கள் என்னால் மறக்க முடியாது எனவும் நயன்தாராவுடன் இணைந்து நடித்த நடிப்பும் என்னால் மறக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

Trending News