திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

7 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த தரிசனம், நயன் கொடுத்த என்ட்ரி.. ட்ரெண்டாகும் புகைப்படம்

Actress Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து தற்போது அவர் ஜவான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் நயன்தாராவின் கேரக்டரும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா இதன் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடிக்கவும் களமிறங்கி உள்ளார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: ரிவால்வர் ரீட்டாவாக மாறிய நயன்தாரா.. மாஸாக மிரட்டும் விஜய் சேதுபதி, வெளிவந்த ஜவான் போஸ்டர்

அதாவது நயன்தாராவின் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பரில் வெளியான கனெக்ட் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. அவ்வப்போது இவர் பொதுவெளியில் தென்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் தான் மீடியாவில் வெளியாகி கொண்டிருந்தது.

அதன் காரணமாகவே இவரை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நயன்தாரா நடித்துள்ள புது விளம்பர படத்தின் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு பிறகு நயனின் ஆன் ஸ்கிரீன் தரிசனம் கிடைத்திருக்கிறது.

Also read: நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

அதனாலேயே அந்த போட்டோ இப்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் நயன்தாரா பிங்க் நிற உடையில் மிகவும் கெத்தாக காருக்குள் அமர்ந்திருக்கிறார். அசரவைக்கும் அவருடைய பார்வை தான் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருக்கிறது.

இவ்வாறாக வெளிவந்திருக்கும் இந்த போட்டோவை பார்க்கும் போது அது கார் சம்பந்தப்பட்ட விளம்பர படமாக இருக்கும் என்று தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் ஜவான் ரிலீசுக்கு முன்பே இப்படி ஒரு போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

நயனின் ஆன் ஸ்கிரீன் தரிசனம்

nayanthara-latest
nayanthara-latest

Trending News