புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அறம் படத்தில் மட்டும் தான் நயன்தாரா குட்.. தனுசை மட்டுமே தக்காளி தொக்காக்கிய சூப்பர் ஸ்டார் பட விவகாரம்

நயன்தாரா தனுஷ் இருவருக்கும் கதை திருட்டு சம்பந்தமாக நடைபெற்று வந்த மோதல் அனைவருக்கும் தெரிந்தது. அறம் படத்தில் மட்டுமே நயன்தாரா நீதி, நேர்மை தவறாதவராய் நடித்திருப்பார் ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை எனபிரபல பத்திரிகையாளர் விளாசி உள்ளார்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ஒளிபரப்பும் உரிமையை Netflixக்கு விற்கப்பட்டது. அந்த வீடியோவில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் பட சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றது. இதனால் தனுஷ் தரப்பில் இருந்து வழக்கு போட்டு பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது.

தற்போது அதே கல்யாண வீடியோவில், சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் காட்சிகளையும் வைத்து விட்டார்கள் என ஒரு பிரச்சனை சமீபத்தில் பூதாகரமாக கிளம்பியது.

ஆனால் அதற்கு நயன்தாரா தரப்பு சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தினோம், ஆனால் அதற்காக முறையான அனுமதி பெற்று விட்டோம் என அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அனுமதி ஆவணத்தையும் அவர்கள் தரப்பு வெளியிட்டுள்ளது.

இப்படி ரஜினி படத்திற்கு மட்டும் முறையான அனுமதி வாங்கிவிட்டு தனுஷ் படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டார்கள். அப்போ தனுஷ் மட்டும் என்ன தக்காளி தொக்கா, அவர் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தும் அனுமதி பெற்று காட்சிகளை சேர்த்திருக்கலாமே என நயன்தாராவை விமர்சித்து வருகிறார்கள்.

Trending News