பிரபல நகைக்கடை ஒன்று விளம்பர படத்திற்காக நயன்தாராவை நாடியுள்ளனர். இரண்டு நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். தன்னால் மொத்தமாக 8 மணி நேரம் நடித்துக் கொடுக்க முடியாது, இரண்டு நாட்களாக பிரித்து நான்கு மணி நேரமாக நடித்து தருகிறேன் என புக்கிங் கொடுத்திருக்கிறார்.
அவருடன் சேர்ந்து நடிப்பதற்காக சக ஆர்டிஸ்ட்கள் 25 பேர் வந்துள்ளனர். விளம்பர மாடல்ஸ், டைரக்டர் என அனைவரும் சொன்ன நேரத்திற்கு வந்துள்ளனர். ஆனால் நயன்தாரா இரண்டு நாட்கள் சொல்லிவிட்டு ஒரே நாளில் 8 மணி நேரமும் நடித்து முழுவதையும் முடித்து விட்டாராம்.
இப்படி ஒரு நாளில் அனைத்து படப்பிடிப்பையும் முடித்து மொத்தமாக இரண்டு நாட்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடையை கட்டியுள்ளார். ஆனால் சக நடிகர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்கள் சம்பளம் பேசப்பட்டு ஒரு நாள் கூலி மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளது அந்த நகைக்கடை.
இப்படி நகைக்கடை விளம்பரத்திலேயே பெரிய அக்கப்போர் செய்துள்ளார் நயன்தாரா. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று அவர் வெளியிட்ட அறிக்கை தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கிறது.
நயன்தாராவின் கல்யாண வீடியோவை நெட்பிலிக்ஸ் தொகுத்து வழங்கியதற்கு பிறகு அவரின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. இப்பொழுது ராக்காயி மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் மட்டும் தான் அவர் கையில் இருக்கிறது. தமிழை தவிர மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.