ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கர்மா வட்டியுடன் வந்து சேரும், தனுஷை சீண்டும் நயன்.. செத்த சும்மா இருங்க அம்மணி

Nayanthara: தினமும் சமூக வலைத்தளம் பக்கம் போனாலே தனுஷ் நயன்தாரா பஞ்சாயத்து தான் பெரும் பஞ்சாயத்தாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் தனுஷை சீண்டிப் பார்த்திருக்கிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவை பொருத்தவரைக்கும் தனக்கு எதிராக பரப்பப்படும் எந்த ஒரு செய்திக்குமே பதில் கொடுக்காதவர்.

அதேபோன்று தன்னை பற்றி பேசுபவர்களையும் ஈசியாக கடந்து போய்விடுவார். ஆனால் தனுஷ் விஷயத்தில் இவர் நடந்து கொள்ளும் விதம் ரொம்பவே புதுமையாக இருக்கிறது. நானும் ரௌடி தான் பட காட்சிகளை அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியது விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்பில் தப்பு தான். அதற்காகத்தான் தனுஷ் வழக்கு தொடுத்து இருக்கிறார் என்பது ஒட்டுமொத்த இணையவாசிகளின் கருத்தாக இருக்கிறது.

தனுஷை சீண்டும் நயன்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனுஷ் நயன்தாரா மீது போட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் அந்த படத்தின் காட்சிகளை உபயோகப்படுத்தியதற்கு நயன்தாரா மற்றும் netflix தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது. அதை தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரின் விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வந்தது.

இறுதி தீர்ப்பாக இருவரது திருமண உறவும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டதட்ட 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர். இந்த நேரத்தில் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நீங்கள் பொய் சொல்லி ஒருவரது வாழ்க்கையை கெடுக்க நினைத்தால் அதை கடன் வாங்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக கர்மா வட்டியும் முதல் உடன் வந்து சேரும் என அந்த ஸ்டோரியில் எழுதப்பட்டிருக்கிறது.

Nayanthara
Nayanthara

சமீபத்தில் தனுஷ் உடைய திருமண உறவே முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இவர் இந்த ஸ்டோரியின் மூலம் தனுஷை தான் சேர்ந்து இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டு என்பது போல் இந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் வளர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.

Trending News