தனுஷ் கேட்ட நஷ்டஈடு, அதற்க்கு நயன்தாரா வெளியிட்ட அறிக்கை இப்படி பிரச்சனை மேல் பிரச்சனை என்று சென்று கொண்டிருந்தது. நயன்தாரா அறிக்கை வெளியிடாமல் மேலோட்டமாக கூறியிருந்தாலோ, இல்லை, அவர் வாயே துறக்காமல் இருந்திருந்தாலோ, இன்று நயன்தாரா பக்கம் தான் மக்கள் ஆதரவாக நின்றிருப்பார்கள். ஆனால் அதை அவர் செய்யவில்லை.
மாறாக கேட்பார் பேச்சை கேட்டு, அறிக்கை எனும் பெயரில், தனுஷின் மீதிருக்கும் வெறுப்பை கக்கி, விமர்சனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். இப்படிபட்ட சூழ்நிலையில், ஏற்கனவே நயன்தாரா மீது, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று பலருக்கு வருத்தம் இருந்து வந்துள்ளது. அதை தற்போது வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
ஏற்கனவே இப்படி பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இந்த பிரச்சனை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்ற பெயரில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் நயன்தாரா.
அந்த பேட்டி, இவருக்கு இன்னும் அதிக பிரச்சனைகளை கொடுத்து விட்டது என்றே கூறலாம். அந்த பேட்டியில், வலைப்பேச்சு Youtube சேனல்-ல் பேசும் மூவரையும் குரங்கு என்று விமர்சித்திருந்தார் நயன்தாரா.
அதுவும் அவரை பற்றி பேசி தான் வயிற்றை நிரப்பிக்கொள்கிறார்கள் என்று கூறியதை தொடர்ந்து, ‘அப்படியே ஆகட்டும்’ என்ற மனநிலையில், தற்போது தினமும் நயன்தாராவை வறுத்து எடுக்கிறார்கள். அப்படி அவர் சமீபத்தில், நயன்தாரா பண்ணும் அக்கப்போர்களை கூறியுள்ளார்கள்.
அது என்னவென்றால், பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்-ல் இயக்குனர்கள் மானிட்டரில், நடிப்பை பார்த்து cut என்று சொல்லுவார். இந்த மானிட்டர் பார்க்கும் உரிமை, இயக்குனர், முதன்மை உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர்-க்கு மட்டும் தான் உரிமை உள்ளது.
ஆனால் நயன்தாரா உலகத்தில் இல்லாத ஒரு புதிய வழக்கத்தை கொண்டு வந்துள்ளார். அது என்னவென்றால், இயக்குனர்களுக்கு மானிட்டர் வசதி போல, அவருடைய Hair stylist மற்றும் Make up artist-க்கும் ஒரு மானிட்டர் கொடுக்கவேண்டுமாம்.
அவர்களும் இயக்குனர்கள் போல செக் செய்து, இவரது கூந்தல், மேக் up உடை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று Check செய்வார்களாம்.. எப்பேர்ப்பட்ட ஐடியா.. இப்படியெல்லாம் செய்தால் யார் தான் புலம்பாமல் இருப்பார்கள்.