செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ஆஹா! முடிந்தது கல்யாணம்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அவர்களது ரசிகர்களும் கூட திருமணத்தைப் பற்றி பல கேள்விகளை கேட்டு வந்தனர்.

அதற்கு இருவரும் சமூக வலைதளங்களில் சாமர்த்தியமாக பதில் அளித்து வந்தனர். ஒருமுறை விக்னேஷ் சிவன் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் பணம் தேவை தற்போது அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என நாசுக்காக கூட பதில் கூறியிருந்தார். தற்போது நயன்தாரா தன்னுடைய படங்களில் பிஸியாக உள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து பாக்கல 2 காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அடிக்கடி சுற்றுலா சென்று வருவார்கள்.

அங்கு எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவும். அதேபோல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி கோயிலுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் நயன்தாரா நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறி வருகின்றனர். நெற்றியில் பொட்டு வைப்பது சகஜம். ஆனால், நெற்றிக்கு மேல் பொட்டு வைத்தால் அது திருமணம் ஆனதற்கான அர்த்தம் தான் எனவும் கூறி வருகின்றனர்.

Trending News