வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 7, 2025

படங்களைத் தாண்டி நாலா பக்கமும் கல்லா கட்டும் நயன்தாரா.. விளம்பர காசுக்காக ஒரு படி மேலே சென்ற அம்மணி

Actress Nayanthara: நடிகைகளுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தால் பீல்ட் அவுட் ஆகி விடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சரியாகப் பிளான் போட்டு தன்னுடைய மார்க்கெட் சரிந்து விடாமல் பார்த்துக் கொண்ட கெட்டிக்காரர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். அம்மாவான பிறகு நயன்தாராவின் மார்க்கெட் பிச்சிக்கிட்டு போகுது. அதே சமயம் படங்களைத் தாண்டி நாலா பக்கமும் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட பெண்களுக்கான நாப்கின் உற்பத்தி செய்யும் ‘FEMI9’ என்கின்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கு முன்பு சிங்கப்பூர் தொழிலதிபருடன் இணைந்து தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனை பொருட்களை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிலை துவங்கினார்.

‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்ட இந்த நிறுவனத்தின் துவக்க விழாவும் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதற்கான முதலீட்டுக்காகவே படங்களைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்று விளம்பரங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார். அப்போது எடுக்கப்படும் போட்டோ சூட் அனைத்தும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இதில் நயன்தாரா மேல் சட்டை மட்டுமே அணிந்து தன்னுடைய கால் அழகை முழுமையாக காண்பித்து இளசுகளை கதி கலங்க வைக்கிறார். மேலும் ஷாருக்கான் உடன் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு என்ட்ரி ஆன நயன்தாரா அங்கேயும் நிறைய பட வாய்ப்புகளை பெறுகிறார்.

வாய்ப்பு வர வர இவருடைய உடையும் குறைந்து கொண்டே போகிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கும் நயன்தாரா, இப்போதெல்லாம் முன்பை விட கிளாமர் தூக்கலாக நடிக்கிறார். அதிலும் அம்மணி விளம்பரங்களில் படு மோசமாக இறங்கி நடித்து கை நிறைய காசு பார்க்கிறார்.

விளம்பர காசுக்காக ஒரு படி மேலே சென்ற நயன்தாரா

nayan1
nayan-new-look-cinemapettai

Trending News