வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வர வர வாய்ப்பு கம்மி ஆயிட்டே போகுது.. அடுத்த பிசினஸை தொடங்கிய நயன்தாரா

Nayanthara: நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு அவருடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு சினிமாவில் வாய்ப்புகள் அவருக்கு இறங்கு முகமாகவே தான் இருந்து வருகிறது. தற்போதைக்கு நயன்தாரா மலை போல் நம்பி இருப்பது ஜவான் திரைப்படம் மட்டும் தான். இந்த படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நயன்தாரா கைவசம் எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் இல்லை.

அடித்த கூத்தெல்லாம் கர்மாவாய் திரும்பியது போல், வந்த வாய்ப்புகளை எல்லாம் கேரக்டர் சரியில்லை என்று சொல்லி தட்டிக் கழித்த நயன்தாராவுக்கு, தற்பொழுது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. ஜவான் திரைப்படத்தின் பிசினஸை வைத்து தான் இனி நயன் அடுத்த கட்ட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தான் இருக்கிறார்.

Also Read:பத்தினி வேஷம் போட்டு ஏமாற்றிய நடிகை.. பொறி வைத்துப் பிடித்து முகத்திரையை கிழித்த மாமனார்

ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால் தற்போது அவ்வப்போது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி நயன்தாராவை ட்ரெண்டில் வைத்திருக்கிறது. இதை அப்படியே காப்பாற்றிக் கொள்ள நயன்தாரா ஒரு புதிய திட்டத்தை போட்டு இருக்கிறார். இத்தனை வருடங்களாக சினிமாவில் வெற்றி ஹீரோயினாக இருந்தோம் நயன்தாராவுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் எந்த அக்கவுண்டும் இல்லை.

நயன் பற்றிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார். மேலும் இதுவரை தன் மகன்களின் புகைப்படங்களை காட்டாது இருந்த இந்த தம்பதி, உயிர் மற்றும் உலகம் என்ற பெயரிடப்பட்டிருக்கும் தன்னுடைய மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார்கள்.

Also Read:அறுசுவை பந்திப்போட்டு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை.. பெரும்புள்ளிகள் உடன் அடித்த லூட்டி

இப்படி திடீரென நயன்தாரா களத்தில் குதிப்பதற்கு முக்கிய காரணமே வியாபார யுக்தி தான். இனி இந்த அக்கவுண்டில் நயன்தாரா என்ன பதிவிட்டாலும் அது பயங்கர வைரல் ஆகிவிடும். சாதாரணமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்பவர்களுக்கே விளம்பரங்கள் தேடி வருகிறது. அப்படி இருக்கும் பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்றால் வரவேற்பு எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியும்.

பட வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்று வியாபார யுக்தியுடன் நயன்தாரா அடுத்தடுத்து தெளிவாக காய் நகர்த்தி வருகிறார். சரியாக ஜவான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இவர் அக்கவுண்ட் தொடங்கி இருப்பது, படத்தின் ப்ரோமோஷன் மற்றும் அடுத்த கட்ட பிசினஸ்க்காக என்று தெளிவாகத் தெரிகிறது.

Also Read:திருமணமான இயக்குனர் மேல் வந்த வெறித்தனமான காதல்.. கை கூடாததால் விபரீத முடிவை தேடிய நடிகை

Trending News