திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

முத்தமா.? சீ போடா சைக்கோ என திட்டிய நயன்தாரா.. விக்னேஷ் சிவனுக்கு நடந்த அவமானம்

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்தது விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படம் தான் இன்று ரிலீஸ் ஆன ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம். இந்தப்படத்தில் சமந்தாவும் நடித்திருக்கிறார்.

எனவே நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு துவங்கிய முதல் காட்சி முடிந்த பிறகும் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், படம் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அத்துடன் இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன்-நயன்தாராவிற்கு இடையே நிகழ்ந்த காரசாரமான ஒரு சம்பவம் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நயன்தாராவிற்கு முத்தக்காட்சி ஒன்று வைக்கப்பட்டுள்ளதாம்.

அப்போது டைரக்டர் மற்றும் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இன்னும் கிட்ட க்ளோசாரா வாங்க வாங்க வாங்க என நயன்தாராவை கூறியிருக்கிறார். அப்போது கடுப்பில் நயன்தாரா, ‘சீ போடா சைக்கோ’ என்று திட்டி விட்டு வெளியேறி விட்டாராம். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் இப்படியெல்லாம் செய்யச் சொல்வது நயன்தாராவை வெறுப்படைய செய்திருக்கிறது.

விஜய் சேதுபதிக்கு பெரும் ஏமாற்றம்தான் என்பது நகைச்சுவையாக உள்ளது. பின்பு அந்த காட்சி வேண்டாமென்று விக்னேஷ் சிவன் தூக்கி விட்டாராம். இப்படி தனது காதலனை முத்தக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது என்ன செய்வதென்று சங்கோஜப் பட்டுள்ளார் நயன்தாரா. சொல்லும் போதே சிரிப்பு வருதில்ல நம்பித்தான் ஆகணும்.

அஜித்துடன் இணைய உள்ளார் விக்னேஷ் சிவன், இந்தப் படம் வெளிவந்த பின்பு தான் திருமணம் என்பது போன்று தெரிவிக்கிறது கோலிவுட் வட்டாரங்கள். ஆனால் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. திருமணத்திற்கு பின் நயன்தாரா தயாரிப்பை மற்றும் பார்ப்பாரா இல்ல நடிப்பாரா.? என்பது இனிமேல்தான் தெரியவரும். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எதிர்பார்த்த அளவு இந்த படம் நல்ல விமர்சனங்களை பெறவில்லை என்பது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.

Trending News