சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

எல்லாத்தையும் உல்டாவாக செய்யும் நயன்தாரா.. ஓடாத படத்துக்கு இவ்வளவு அலப்பறையா

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாராவுக்கு இந்த வருடத்தில் வெளியான எந்த திரைப்படமும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதிலும் தற்போது வெளிவந்திருக்கும் கனெக்ட் திரைப்படம் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக தவறி இருக்கிறது. இதனால் படத்தின் கலெக்சனும் வெகுவாக குறைந்து நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படத்தைப் பார்த்த பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் சில பிரபலங்கள் படம் வெளி வருவதற்கு முன்பே பிரிமியர் ஷோவை பார்த்துவிட்டு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள். அதிலும் விஜய் டிவியின் அனைத்து பிரபலங்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு ஓவராக அலப்பறை கொடுத்தனர்.

Also read: திரிஷாவுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா.. விஜய்க்கு ஜோடி போட தீயாக வேலை செய்யும் குந்தவை

இதனால் ஒரு ஆர்வத்துடன் படத்தை பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் இல்லாமல் காத்து வாங்கி வருகிறதாம். நயன்தாராவும் படம் வெளியீட்டுக்கு முந்திய நாள் பரபரப்பாக பேட்டி எல்லாம் கொடுத்து பிரமோஷன் செய்தார். ஆனாலும் படம் கல்லா கட்டவில்லை.

இருந்தாலும் மனம் தளராத நயன்தாரா தற்போது புது முயற்சி ஒன்றை செய்து வருகிறார். அதாவது படம் வெளியான பிரபல தியேட்டர்களுக்கு அவர் விசிட் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் மதுரையில் பிரபலமாக இருக்கும் இரண்டு தியேட்டர்களுக்கு நாளை விசிட் செய்ய இருக்கிறாராம். இதன் மூலம் தன்னை பார்ப்பதற்காகவாவது தியேட்டரில் கூட்டம் கூடிவிடும் என்பதே அவருடைய திட்டம்.

Also read: நயன்தாரா இடத்தை பிடிக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்

அந்த வகையில் ஒரு நாளைக்காவது சொல்லும் படியான கலெக்ஷனை அள்ளிவிடலாம் என்று நயன்தாரா பிளான் செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே நாளை அவரை பார்க்க ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எல்லோரும் படத்தின் ரிலீஸ்க்கு முன்பு தான் இது போன்று பிரமோஷன் வேலைகளில் ஈடுபடுவார்கள்.

ஆனால் நம்ம தலைவி எல்லாத்திலும் வித்தியாசம் தான். அதனால் தான் அவர் இப்படி உல்டாவாக படம் ரிலீஸ் ஆன பிறகு படத்தை பிரமோஷன் செய்து வருகிறார். ஏனென்றால் இது அவருடைய காசை போட்டு எடுத்த சொந்த படம் என்பதால்தான். இதுவே மற்ற தயாரிப்பாளர்களின் படம் என்றால் அவர் கண்டும் காணாமல் இருந்து விடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த விஷயம் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Also read: நயன்தாராவை கழட்டிவிட்ட வெற்றி இயக்குனர்.. கல்யாணமானதிலிருந்தே மவுசை இழக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

Trending News