வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

இப்படியே போனா பொழப்பு ஆட்டம் கண்டுடும்.. சாகசத்துக்கு தயாராகும் நயன்தாரா

Actress Nayanthara: நயன்தாரா தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டு மண்ணாங்கட்டியில் பிசியாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் போதிய வரவேற்பை பெறவில்லை. அதிலும் சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி சில சர்ச்சைகளையும் சந்தித்தது.

அதனாலேயே நயன் தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது தரமான கதையாக இருந்தால் மட்டும் நடிக்கலாம். இல்லையென்றால் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதன் முதல் கட்டமாக தன்னை தேடி வரும் கதைகளை எல்லாம் சல்லடை போட்டு சலித்து வருகிறாராம்.

அதில் தற்போது துரை செந்தில்குமார் கதையை அவர் ஓகே செய்து இருக்கிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியிருக்கும் இவர் தற்போது சூரி மற்றும் சசிகுமார் கூட்டணியை வைத்து கருடன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Also read: நயன்தாரா மட்டும் வேண்டவே வேண்டாம்.. பட்ட அவமானத்திற்கு 7 வருடங்களாக பழி வாங்கும் ஸ்டைலிஷ் ஹீரோ

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அடுத்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. அதை அடுத்து நயன்தாராவின் படம் தொடங்கப்பட இருக்கிறது. யானைக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் இருக்கும் பாச பிணைப்பு தான் இப்படத்தின் கதை. இதில் சாகசம் மட்டுமல்லாமல் சென்டிமென்ட்டும் தாராளமாக இருக்குமாம்.

பல தைரியமான கேரக்டர்களில் நடித்துள்ள நயன்தாராவுக்கு இந்த சாகச கதையும் ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனாலயே இதில் நடிக்க அவர் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறாராம். இதன் மூலம் எப்படியாவது தன்னுடைய நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது.

ஏனென்றால் இவருக்கு போட்டியாக த்ரிஷா கிடு கிடுவென முன்னேறிக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் நம்முடைய பொழப்பு ஆட்டம் கண்டுவிடும் என நயன்தாரா தற்போது சுதாரித்து கொண்டுள்ளார். அதன் காரணமாகவே தன்னைத் தேடி வரும் கதையை அலசி ஆராய்ந்து ஒப்புக் கொள்கிறார்.

Also read: லெஜெண்ட் அண்ணாச்சியை கடுப்பாக்கிய நயன்தாரா.. அம்புட்டு கோடி கொடுத்தும் கெத்தை காட்டிய சம்பவம்

Trending News