வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜயாகவே இருந்தாலும் நடிக்க முடியாது.. Goat படத்தில் நயன்தாரா நடிக்காதது ஏன்?

இந்த வருடம் வெளியாகி Blockbuster ஆன படங்களில் கோட் படமும் ஒன்று. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்த கோட் படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. அப்பா காந்தி, மகன் ஜீவனாக நடித்து அசத்தியிருந்தார் விஜய்.

மேலும் விஜய் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும், தான் சினிமாவில் இருந்து விலகும் அறிவிப்பையும் வெளியிட்டார். அதனாலயே இந்த படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருப்பார். ஆனால் இந்த ரோல்-க்கு முதலில் நயன்தாராவிடம் தான் கேட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

விஜய்யாகவே இருந்தாலும், நடிக்க முடியாது

மேலும் விஜய்யுடன் சேர்ந்து ஏற்கனவே நடித்ததால் மீண்டும் அவர் ஜோடியாக நடிக்கவும் ஆவலாக இருந்தார். ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டார். அதற்க்கு காரணம் அந்த படத்தில் நடித்திருந்த மற்ற ஒரு முக்கிய நடிகர், அவருக்கும் நயன்தாராக்கும் சுத்தமா செட் ஆகாது.

சொல்லப்போனால், அவரால் தான் நயன்தாராவின் பெயரே கெட்டுப்போனது. கோட் படத்தில் கல்யாண் சுந்தரம் எனும் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிப்பது குறித்து அறிந்த பிறகே நான் நடிக்க முடியாது என்று நயன்தாரா கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முதலில் அவர் நடிக்கிறார் என்று இவருக்கு தெரியாது. அப்போது நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பிரபுதேவா படத்தில் கமிட் ஆன பிறகு, என்னால் நடிக்க முடியாது என்று நயன்தாரா கூறிவிட்டார். மேலும் விஜயாகவே இருந்தாலும், என்னால் முடியாது. பிரபு தேவா இல்லையென்றால், இந்த படத்தில் நடித்திருப்பேன் என்று அவர் கூறியதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Trending News