திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்தை அக்குவேறு ஆணிவேராக அலசும் நயன்தாரா.. கணவருக்காக நடந்த ரகசிய மீட்டிங்

திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா ரொம்பவும் மாறி இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து நிதானமாக செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் இப்பொழுது அலசி ஆராய்ந்து தான் ஒரு விஷயத்தை தேர்வு செய்கிறாராம். அதிலும் குழந்தைகள் பிறந்த பிறகு அவருடைய பொறுப்பு இரட்டிப்பாக மாறி இருக்கிறது. அதனாலேயே வருடத்திற்கு இரு படங்கள் மட்டுமே நடிக்கும் முடிவில் அவர் இருக்கிறாராம்.

மற்ற நேரங்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, கணவருக்கு சப்போர்ட் செய்வது என்று பிளான் செய்து வைத்திருக்கிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் தற்போது இயக்கப் போகும் திரைப்படத்திற்காக நயன்தாரா ரொம்பவும் மெனக்கிடுகிறாராம். துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்கப் போகும் படம் என்பதால் இதற்கு இப்போதே எதிர்பார்த்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

Also read: திருமணத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் நயன்தாரா.. ட்ரண்டாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அது மட்டுமல்லாமல் நயன்தாராவும் சமீபத்தில் துணிவு திரைப்படத்தை பார்த்த கையோடு அஜித்துடன் ஒரு ரகசிய சந்திப்பும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் பல விஷயங்கள் குறித்து அஜித்துடன் பேசிய நயன்தாரா அவரை அக்குவேறு ஆணிவேராக அலசி இருக்கிறார். அதாவது படத்தில் அவருடைய காஸ்டியூம், லுக், டான்ஸ் இப்படி அவருக்கு எது செட் ஆகும் என்பதை பற்றியும் தீவிரமாக கலந்தாலோசித்திருக்கிறார்.

மேலும் கதை குறித்தும் அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். இது அனைத்தும் அவர் தன் காதல் கணவருக்காக மட்டுமே பார்த்து பார்த்து செய்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா, திரிஷா இருவரில் ஒருவர்தான் தான் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஐஸ்வர்யா ராய், ஹுமா குரேஷி போன்ற பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் அடிப்பட்டது.

Also read: இப்ப வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.. நம்பி மோசம் போயிட்டோமே!

ஆனால் இப்போது அஜித்துக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கப் போகிறார் என்ற ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. இது ஒரு புறம் இருக்க நயன்தாரா அடுத்த கட்ட வேலைகளில் கணவருக்கு உதவியாக இருந்து வருவதும் ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால் இப்படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது.

அப்படிப்பட்ட பிரம்மாண்டமான படத்தில் விக்னேஷ் சிவனின் உழைப்பு நிச்சயம் கடுமையாக தான் இருக்கும். அது எந்த விதத்திலும் சொதப்பி விடக் கூடாது என்பதற்காகத்தான் நயன்தாரா இவ்வளவு மெனக்கெட்டு வருகிறாராம். அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த படத்தின் சூட்டிங் சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்படுகிறது. அதிலும் இப்படத்தில் அஜித் எதிர்பாராத ஒரு கெட்டப்பில் வர இருப்பதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் ப்ரீ சேல் பிசினஸும் களைகட்ட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: பட்ஜெட்டில் முக்கால்வாசியை சம்பளமாக கேட்ட அஜித்.. செமையா செக் வைத்து விட்ட தயாரிப்பாளர்

Trending News