நவம்பர் 18 இன்று நயன்தாரா பிறந்தநாளை தொடர்ந்து, அவரது ஆவணப்படம் Netflix OTT தளத்தில் வெளியானது. தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளில், அவர் உண்மையில் வாழ்க்கையில் சந்தித்த பல விஷயங்களை ரசிகர்களிடம் கூறவேண்டும் என்று நினைத்துள்ளார்.
அதற்க்கு அவர் கையில் எடுத்தது தான் Nayanthara: Beyond The Fairytale ஆவணப்படம். பொதுவாக நயன்தாராவை விமர்சிக்க நினைப்பவர், அவரது charecter-ஐ மோசமாக பேசிவிடுவார்கள். ஏன் என்றால், அதிகமாக காதல் சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகை.
ஆனால் பெண் என்பதாலே, இவரை சுற்றி தான் விமர்சனங்கள் முன்வைக்கபட்டு சர்ச்சையானது. ஒருவர் கூட இவரை காதலித்தவர்களிடம் சென்று ஏன்? என்ன பிரச்சனை உங்களுக்குள் என்று கேட்டதில்லை. இவரை காதலித்தவர்களின் charecter-ஐ தவறாக சித்தரிக்கவில்லை.
ஏன் ஆண்களை ஒருவரும் கேள்வி கேட்கவில்லை..?
இதை தான் தற்போது நயன்தாராவும் கேட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, “எனது முதல் relationship முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் இருந்தது. காதலை விட நம்பிக்கையும் மரியாதையும் மிகவும் முக்கியம். நான் எப்போதும், என் 100 சதவீதத்தை தான் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதற்க்கு முன்பு எனக்கு எதுவும் சரியாக அமையவில்லை”
“என்னுடைய முந்திய relationship பற்றி நான் எங்குமே பேசியதில்லை. ஆனால் என்ன ஏது என்று கேட்க்காமல், வாய்க்கு வந்தபடி எல்லோரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் என் கேள்வி என்னவென்றால், நான் மட்டும் தான் காதலித்தேனா? ஆண்கள் யாரும் காதலிக்கவில்லையா? ஏன் அவர்கள் யாரையும் கேள்விகேட்க மறுக்கிறீர்கள்?”
“அவர்களிடமும் என்ன ஏது என்று கேட்கவேண்டியது தானே. நீங்கள் ஏன் இதை செய்தீர்கள்.. உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்க வேண்டியது தானே? ஆனால் மாட்டார்கள். பெண்கள் என்றால் அவர்களுக்கு செட் ஆகுதோ இல்லையோ, ஒருவரை மட்டும் தான் காதலிக்க வேண்டும். இது ஒரு எழுதப்படாத விதியாக உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பலர் நயன்தாராவுக்கு ஆதரவாக தற்போது பேசி வருகின்றனர்.