வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பத்ரகாளியாய் மாறி கட்டம் கட்டி தூக்கிய நயன்தாரா.. புரியாத புதிராய் மாறிய லேடி சூப்பர் ஸ்டார்

20 வருட போராட்டத்திற்கு பின் தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த இரண்டு வருடங்களாக சினிமா படங்களில் அதிகம் தலை காட்டாமல் இருந்த அவர் இப்பொழுது மெல்ல மெல்ல தன் கேரியரை நிலை நிறுத்திக் கொள்ள படங்களில் கமிட்டாகி வருகிறார்.

டெஸ்ட், ராக்காயி, தனி ஒருவன் 2 என அடுத்தடுத்து இவர் நடிப்பில் படங்கள் வெளியாக இருக்கிறது. தற்சமயம் நெட்பிலிக்ஸ் வலைத்தளத்தில் இவரது கல்யாண ஆவணப்படம் வெளியாகி உள்ளது. அதில் இவர் சினிமாவில் தன் கேரியரை தொடங்கியதிலிருந்து இப்பொழுது வரை சந்தித்த போராட்டங்களையும், கடந்து வந்த இன்னல்களையும் காண்பித்து ஒரு சுயசரிதை படமாக அமைத்திருந்தார்.

ஆனால் அந்த படத்தில் பல உண்மையான நிகழ்வுகளை மறைத்துள்ளார். குறிப்பாக பிரபுதேவா உடனான லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப். நடிகர் சிம்புவுடனான காதல் போன்றவற்றை அதில் காட்டவில்லை. அதுவும் போக ஒரு சமயத்தில் நடிகர் ஒருவருக்கு எதிராக பத்ரகாளியாக மாறிவிட்டார், அதையும் காட்டவில்லை.

திமுக கட்சியில் முக்கிய அங்கமாய் இருப்பவர் நடிகர் ராதாரவி. அவர் ஒரு முறை நயன்தாரா, சீதா என்ற சாமி படத்தில் நடித்திருந்தார். பக்தி படங்களில் நடிக்கும் நடிகைகளை கையெடுத்து கும்பிட வேண்டும். ஆனால் நயன்தாரா அப்படி இல்லை என அருவருக்கத்தக்க சொற்களில் பேசி விட்டார். கொலையுதிர் காலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படி பேசினார் ராதாரவி.

இதுதான் நயன்தாரா வாழ்க்கையில் பெரிய பூதாகர பிரச்சினையாக வெடித்தது. அப்பொழுது பத்ரகாளியாய் மாறி ராதாரவிக்கு பல இடத்திலிருந்து மன்னிப்புக்கு கேட்கும் படி நெருக்கடி கொடுத்தார். இதனால் திமுக கட்சி ராதாரவியை கட்சியிலிருந்தே விலக்கியது. இப்படி தனக்கு பத்ரகாளியாய் மாறவும் தெரியும் என நிரூபித்தார் நயன்தாரா.

Trending News