வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சென்சாருக்கு தயாரான ஜவான், கடுப்பில் நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரை நம்ப வச்சு கழுத்தறுத்த அட்லி

Actress Nayanthara: அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜவான் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் அசத்தலான என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான முன்னோட்ட வீடியோ, போஸ்டர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

அதனாலேயே படத்திற்கான எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நயன்தாரா தன் தம்பி அட்லி மீது கொல காண்டில் இருக்கிறாராம். ஏனென்றால் அட்லி, நயன்தாராவை பாலிவுட்டில் முன்னணி நாயகியாக மாற்றி காட்டுகிறேன் என்று கூறி தான் இந்த படத்தில் கமிட் செய்திருக்கிறார்.

Also read: பயந்த மாதிரியே முத்தக் காட்சியுடன் வெளிவந்த ஜவான் பாடல்.. அட்லி மீது கொல காண்டில் இருக்கும் விக்கி

இது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் படத்தில் நயன்தாராவின் கேரக்டரும் வேற லெவல் மாஸாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கேமியோ ரோலில் வரும் தீபிகா படுகோன் நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் நயன்தாராவுக்கான முக்கியத்துவம் இருக்குமா என்று யூகித்த நிலையில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறதாம். அதாவது ஜவான் இப்போது சென்சாருக்கு தயாராகி விட்டது. இறுதியாக படத்தை ஒரு முறை பார்த்த நயன்தாரா ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டாராம்.

Also read: ஜவானால் மீண்டும் அசிங்கப்பட போகும் அட்லி.. விஜயகாந்த் படத்தை காப்பி அடித்ததால் வந்த விளைவு

ஏனென்றால் அவர் நடித்த பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு நீக்கப்பட்டு இருக்கிறதாம். மேலும் அட்லி, ஷாருக்கானுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் வகையில் படத்தை கொண்டு சென்றிருக்கிறாராம். இதனால் நயன்தாரா டம்மியாக்கப்பட்டது போல் உணர்ந்திருக்கிறார்.

அதை தொடர்ந்து அட்லியிடம் அவர் சண்டையும் போட்டு இருக்கிறார். ஆனாலும் படம் இப்போது சென்சாருக்கு சென்றுவிட்டது. இதனால் நயன்தாரா தன் பாலிவுட் என்ட்ரி எப்படி வரவேற்பு பெறும் என்ற கலக்கத்தில் இருக்கிறாராம். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டாரை நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டார் அட்லி.

Also read: சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்ட நயன்தாராவின் 4 படங்கள்.. இரண்டாவது படத்திலேயே எகிறிய மார்க்கெட்

Trending News