திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹனிமூனில் அலப்பறை பண்ணும் நயன்தாரா,விக்கி.. ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு செலவா?

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிலையில் சில நட்சத்திரங்களை மட்டும் இவர்களது திருமணத்திற்கு கலந்து கொள்ளவில்லை அதற்கு பலவித காரணங்களும் வெளியாகின.

நயன்தாரா திருமணத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதித்ததன் காரணமாகவும் சில செயல்கள் பிரபலங்களுக்கு பிடிக்காததும் காரணமாகும் தான் திருமணத்திற்கு வரவில்லை என கூறினர். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் வெளிநாடுக்கு சென்றுள்ளனர்.

Also read: பின் கழுத்தில் டாட்டூ குத்திய நயன்தாராவின் ரகசியம்.. எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும் விக்கி!

அதாவது நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்து தங்களுடைய படங்களில் கவனம் செலுத்த உள்ளனர்.  நயன்தாராவிற்கு சில படங்கள் கமிட்டாகியுள்ளார். விக்னேஷ் சிவனும் அடுத்து அஜித் வைத்து ஏகே 62வது படத்தை இயக்க உள்ளார். அதனால் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டில் சுற்றி வருகின்றனர். அவ்வப்போது இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் . இவர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறுகின்றனர். மேலும் அங்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் தனி செலவு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Also read: கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட நயன்தாரா.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தயாரிப்பாளர்

ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பிரபல நிறுவத்தின் ஸ்பான்சர் காரணமாகத்தான் வெளிநாடு சென்றுள்ளனர். மேலும் அங்கு செலவு செய்யும் ஒவ்வொரு செலவும் அந்த நிறுவனமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எந்த ஒரு செலவும் இல்லை எனவும் கூறுகின்றனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டிலிருந்து அடுத்து மற்றொரு வெளிநாடு செல்ல இருப்பதாகவும் இனி ஒரு மாத காலம் இவர்கள் இருவரும் நாடு விட்டு நாடு சென்று தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள் எனவும் கூறுகின்றனர். தற்போது இவர்கள் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது அதுமட்டுமில்லாமல் போதும் இனிமேல் உங்களது புகைப்படம் எங்களால் பார்க்க முடியாது என்றும் கூறும் அளவிற்கு இவர்கள் சேட்டை அதிகரித்துள்ளது எனவும் கூறி வருகின்றனர்.

Also read: காலில் விழுந்து சமாதானப்படுத்திய நயன்தாரா.. திருமணத்திற்கு பின் நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்

Trending News