திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

விக்னேஷ் சிவனிடம் புலம்பி தவித்த நயன்தாரா.. நம்பர் ஒன் நடிகைக்கு நடந்த அவமானம்

தற்போதைய கோலிவுட் சினிமாவில் அதிக வயதானாலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், நயன்தாராவுக்கு நடந்த ஒரு அவமானத்தை எண்ணி விக்னேஷ் சிவனிடம் கூறி அழுதுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களுக்கு சவுதி, அரேபியா கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா இருப்பவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் பல பிரபலங்களுடன் கோல்டன் விசா வாங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி பல முதலீட்டாளர்கள், அறிவியல் அறிஞர்கள் போன்ற அனைவருக்கும் இந்த கோல்டன் கொடுக்கப்படுகிறது. ஷாருக்கான், மோகன்லால், மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா போன்றோருக்கு கோல்டன் விசா கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு இதுவரை கோல்டன் விசா வழங்கப்படவில்லை. இதற்காக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தற்போது வரை அவருக்கு இந்த விசா கிடைக்கவில்லை.

நயன்தாராவுக்கு கோல்டன் விசா கிடைக்காததற்கு காரணமாக பார்க்கப்படுவது மத ரீதியான பிரச்சினைதான். நயன்தாரா கிறிஸ்டின் மதத்தை சேர்ந்தவர். ஆனால் தற்போது தன் காதலனுடன் இந்து கோயிலுக்கு சென்று வருகிறார். அதனால் இவர் எந்த மதம் என்பது உறுதியாக தெரியாததால் இவருக்கு கோல்டன் விசா கிடைக்கவில்லை.

மேலும் சின்ன சின்ன பிரபலங்களுக்கு கூட கோல்டன் விசா மிகவும் சுலபமாக கிடைக்கிறது. ஆனால் நயன்தாராவால் எல்லாவற்றையும் வாங்கும் அளவிற்கு வசதி இருந்தாலும் கோல்டன் விசா கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் உள்ளாராம்.

இந்நிலையை விக்னேஷ் சிவன் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறாராம். எப்படியாவது நயன்தாராவுக்கு கோல்டன் விசாவை பெற்று தரவேண்டும் என முழு வீச்சில் போராடி வருகிறார் விக்னேஷ் சிவன்.

Trending News