வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எக்கோவ்! 3 இல்ல, 37 செகண்ட்.. நயன்தாராவை roast செய்யும் நெட்டிசன்கள்

நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆவணப்படம் நயன்தாரா ‘Beyond the Fairytale’ என்ற பெயரில் கடந்த நவம்பர் 18 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நயன் நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரெளடிதான் திரைப்படத்தில் தொடர்பான காட்சிகளை தயாரிப்பாளராக தனுஷ் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளை போட்டார்.

அதை மீறி தற்போது பயன்படுத்தியதால், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இதை தொடர்ந்து, “3 செகண்ட்-க்கு 10 கோடியா.. மனசாட்சி இல்ல ? ” என்று வெளுத்து வாங்கி இருந்தார்கள் நெட்டிசன்கள். இது மிகப்பெரிய பேசும்பொருளாக ஆனது. இந்த நிலையில், தனுஷை மதிக்காமல் நயன்தாரா, தனது படத்தை அவரது பிறந்தநாள் அன்று Netflix-ல் ரிலீஸ் செய்திருந்தார்.

இந்த பிரச்சனைக்கு எல்லாம் மூல காரணம் அண்ணன் விக்னேஷ் சிவன் அவர்கள் தான். அண்ணனுக்கு காதல் பற்றி கொண்டு எறிய, படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்தினார். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறி விட்டது..இதில் கடுப்பான தனுஷ் இனி நான் படத்திற்கு ஒரு பைசா கூட தர மாட்டேன்; படத்தை முடிந்தால் முடியுங்கள்; இல்லை என்றால், படத்தை நான் நிறுத்தி விடுகிறேன் என்று கறாராக கூறிவிட்டார்.

கண்டுபிடித்து Roast பண்ணும் ரசிகர்கள்

இதுவே தற்போதைய பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளியாக உள்ளது. 3 செகண்ட் நேர அளவிலான காட்சிகளை பயன்படுத்தியதற்கே தனுஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அவரின் எதிர்ப்பை மீறி, கிட்டத்தட்ட 37 செகண்ட் அளவிலான நானும் ரெளடிதான் படம் தொடர்பான காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதை கண்டுபிடித்ததே நெட்டிசன்கள் தான். வெறும் 3 செகண்ட் என்று சொல்லிவிட்டு, வாட் ஈஸ் திஸ் நயன் என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் Netflix-ஐ பார்த்தும் மானாவாரியாக கேட்டு வருகின்றனர். அவங்க தான் சொல்றாங்கன்னா.. நீங்க கூடவா செக் பண்ணாம ரிலீஸ் பண்ணுவீங்க..? என்று netflix-இடம் வேறு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தலைவன் 3 செகண்ட்-க்கே 10 கோடி கேட்டார்.. போச்சு போங்க.. ரெண்டு படத்தோட சம்பளத்தை கேட்கப்போறாரு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News