செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Nayanthara: ஒரு இடத்துல சம்பாதித்ததை 9 இடத்தில் முதலீடு செய்யும் நயன்-விக்கி ஜோடி.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா

Nayanthara: நயன்தாரா ஒரு சிறந்த நடிகை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு நல்ல தொழிலதிபரும் கூட என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு அவர் பிசினஸில் முன்னேறி கொண்டிருக்கிறார்.

அதன்படி நடிப்பையும் விடாமல் கவனம் செலுத்தி வரும் நயன் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அந்த வகையில் தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இவர் ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அதேபோல் லிப் பாம் நிறுவனம், femi 9, 9 ஸ்கின் போன்ற கம்பெனிகளை நடத்தி வருகின்றனர். இதில் அவர்களுக்கு நல்ல லாபமும் கிடைத்து வருகிறது. அதே போல் அரபு நாடுகளில் எண்ணெய் நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளனர்.

நயன்தாராவின் முதலீடு

அது மட்டுமின்றி இன்னும் சில தொழில்களிலும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர். அதனாலயே இந்த ஜோடி 24 மணி நேரமும் பிசியாக இருக்கின்றனர். அதே சமயம் தன் இரு குழந்தைகளை கவனிக்கவும் அவர்கள் மறப்பதில்லை.

இப்படியாக நயன்தாரா நடிப்பின் மூலம் சம்பாதித்ததை பல வழிகளில் லாபமாக மாற்றி வருகிறார். மேலும் இதன் மூலம் சம்பாதித்ததை ஆடம்பர பங்களாக்கள் சொகுசு கார்கள் என வாங்கி போட்டு ராணி போல் வலம் வருகிறார்.

அதன்படி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு என்று பார்க்கையில் 250 கோடியை தாண்டுகிறது. அப்படிப்பட்ட நயன்தாராவின் இந்த பயணம் இளம் தலைமுறைக்கு ஒரு உதாரணமாகவும் உள்ளது.

Trending News