சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பார்த்து பேசுவதற்கே சம்பளம் கேட்கும் நயன்தாரா வில்லன்.. லோகேஷை நம்பி மோசம் போன மிரட்டல் நடிகர்

Nayanthara Villain: கோபம், ஏமாற்றம் ஒருவரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் யோசிக்க வைக்கும். அப்படித்தான் பிரபல வில்லன் ஒருவர் கோபத்தின் உச்ச கட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சமூக வலைதளங்களில் அவருடைய உச்சகட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதுவும் அவரைப் பார்த்து பேசுவதற்கே இந்த மாதிரி சம்பளம் வேண்டும் என்று ரேட் பிக்ஸ் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் 15 நிமிஷத்திற்கு 1 லட்சம், 30 நிமிடத்திற்கு 2 லட்சம் மற்றும் 1 மணி நேரத்திற்கு 5 லட்சம் சம்பளம் வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

ஏன் நேரத்தை சும்மா எல்லாம் வேஸ்ட் பண்ண முடியாது. புதுமுகங்களுக்கு நான் உதவி பண்ண வேண்டும் என்று நினைத்ததை பலரும் தவறாக புரிந்து கொண்டு என்னை மிஸ் யூஸ் பண்ணி விட்டார்கள். இனிமேலும் நான் அதற்கு துணை போக மாட்டேன் என்று ஆக்ரோஷமாக பதிவிட்டு இருக்கிறார்.

நயன்தாரா படத்தின் மிரட்டல் ஆன வில்லன்

அவர் வேறு யாருமில்லை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் காஷ்யப். இவர் பாலிவுட் திரையுலகில் இயக்குனராக பிரபலமானார். அதன் பின் சில படங்களை தயாரித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் தமிழில் வில்லனாக நடித்த போது இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் இவரை அணுகி லியோ படத்தில் வாய்ப்பு இருப்பதாக கூறி அழைத்திருக்கிறார். ஆனால் லோகேஷை நம்பி மோசம் போன நிலைமை தான் கடைசியில் ஆகிவிட்டது. ஏனென்றால் லியோ படத்தில் வெறும் ஒரு காட்சிகளில் மட்டுமே அனுராக் நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.

இதனால் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய பதிவை போட்டு சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சடைய வைத்திருக்கிறார். அந்த வகையில் இப்பமே இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று இவருடைய சம்பளத்தை பற்றி தெள்ளத்தெளிவாக போட்டு விட்டார்.

அத்துடன் நான் போட்டு இருக்கும் சம்பளத்திற்கு உங்களுக்கு எந்தவித ஆட்சபனையும் இல்லை என்றால் மட்டுமே என்னை தொடர்பு கொள்ளவும். மற்றபடி என்னை யாரும் சந்திக்க தேவையில்லை என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து சுந்தர் சி மற்றும் இவருடைய நடிப்பில் ஒன் டூ ஒன் படம் உருவாகி வருகிறது. அடுத்ததாக ஜிவி பிரகாஷ் வைத்து ஒரு படத்தை இயக்கவும் போகிறார்.

Trending News