வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இயக்குனர்கள் தலையில் இடியை இறக்கிய நயன்தாரா.. கல்யாணத்திற்கு பின் போடும் புது கண்டிஷன்

கல்யாணம் ஆனாலும் ஆனது நயன்தாராவின் அலப்பறை கொஞ்சம் ஓவரா தான் போயிட்டு இருக்கு. இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில் நயன்தாரா இன்னும் ஹனிமூன் கொண்டாடி கொண்டு இருக்கிறார்.

அதனால் இவரை வைத்து படம் இயக்க காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் பலரும் பயங்கர அப்சட்டில் இருக்கின்றனர். ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு இவர் இயக்குனர்களிடம் புதுசு புதுசாக ஏகப்பட்ட கண்டிஷங்களை போட்டு வருகிறாராம்.

Also read : சிவாஜியே பார்த்து பிரம்மித்து போன நடிகை.. 60, 70களின் நயன்தாரா இவர்தான்

அது மட்டுமல்லாமல் அவர் முடித்துக் கொடுக்க வேண்டிய எல்லா படங்களின் சூட்டிங்கையும் இழுத்தடித்து வருகிறாராம். படம் விரைவாக முடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் இப்பொழுது ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது. உங்களுக்கு அவசரம் என்றால் வேறு யாராவது ஹீரோயினை வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக கூறுகிறாராம்.

சமீபத்தில் இவர் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். ஆனால் இப்பொழுது அந்த படத்தை அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி இயக்குனர் தலையில் ஒரு இடியை இறக்கியுள்ளார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருந்த இயக்குனர் தற்போது இடிந்து போய் இருக்கிறாராம்.

Also read : ரிலீசுக்கு தயாரான ஐஸ்வர்யா ராஜேஷின் 4 படங்கள்.. நயன்தாரா இல்லாத இடத்தை நிரப்புறாங்க போல

நயன்தாராவின் 75 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு 10 கோடி வரை சம்பளம் கொடுக்க பேசப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் அவர் இப்படி ஒரு குண்டை போட்டுள்ளார்.

இதனால் படத்தை எப்பொழுது ஆரம்பிப்பது என்று தயாரிப்பு தரப்பு மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறதாம். இந்த விஷயம் தான் தற்போது திரையுலகில் சலசலக்கப்பட்டு வருகிறது. என்ன இருந்தாலும் நயன்தாரா தயாரிப்பாளரை பற்றி யோசிக்காமல் நடந்து கொள்வது கொஞ்சமும் சரியில்லை என்று பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

Also read : தொடர்ந்து சரியும் நயன்தாராவின் மார்க்கெட்.. விக்கியால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நிலை

Trending News