வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தை பழிவாங்க நயன்தாரா எடுத்த புதிய முடிவு.. கெத்தை விட்டு மாஸ் ஹீரோவிடம் கேட்ட வாய்ப்பு

சர்ச்சைகளின் ராணியாக இருக்கும் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்தார். ஆனாலும் தற்போது இவரின் கைவசம் கணிசமான படங்கள் இருக்கிறது. இவ்வாறு பிசியாக இருக்கும் நேரத்தில் கூட இவர் தற்போது மாஸ் ஹீரோ ஒருவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

ஏனென்றால் பொதுவாக நயன்தாரா இதுபோல் யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டார். தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை கூட இவர் பார்த்து பார்த்து தான் செலக்ட் செய்வார். அப்படி இருக்கும் அவர் தன்னுடைய கெத்தை விட்டு இப்படி வாய்ப்பு கேட்கிறார் என்பது பலருக்கும் வியப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் அஜித்தை பழிவாங்க தான் அவர் இப்படி ஒரு விஷயத்தில் இறங்கி இருக்கிறாராம்.

Also read: தந்திரமாய் செயல்படும் வெங்கட் பிரபு, விஜய்.. முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க போடும் திட்டம்

அந்த வகையில் விக்னேஷ் சிவன், அஜித் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்து பின்பு மாற்றப்பட்டது பலருக்கும் தெரியும். அப்போது நயன்தாரா கூட அஜித்தை சந்தித்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பார்த்தார். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தது நயன்தாராவை ரொம்பவும் அவமானப்படுத்தி இருக்கிறது.

அதை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் இப்போது வரை எந்த படமும் கைவசம் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் தளபதி 68 பட அறிவிப்பு வெளியானது. அதை பார்த்த நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் இதன் மூலம் அஜித்தை பழி வாங்கிய மாதிரியும் இருக்கும் என்று திட்டம் போட்டு இருக்கிறாராம்.

Also read: ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்த சம்பவம்

அந்த அளவுக்கு அவர் இப்போது மூக்குத்தி அம்மன் போல் கடும் கோபத்தில் இருக்கிறாராம். அதைத்தொடர்ந்து தான் தற்போது வாய்ப்பு வாங்கும் படலத்தில் அவர் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே இவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதே போல் விஜய்க்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பை எப்படியாவது பிடிப்பதற்கு அவர் போராடி வருகிறாராம்.

ஆனால் ஏற்கனவே தளபதி 68 படத்தில் கீர்த்தி செட்டியை ஹீரோயினாக்க வேண்டும் என்ற வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கிறார். தற்போது லேடி சூப்பர் ஸ்டாரும் இந்த போட்டியில் குதித்துள்ளது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு நயன்தாராவுக்கு கைகொடுக்கும் என்பதுதான் தெரியவில்லை.

Also read: உலக பட்டினி தினத்திற்கு தளபதி செய்யப் போகும் சம்பவம்.. தமிழ்நாட்டைத் தாண்டி வேலை செய்யும் அரசியல்

Trending News