வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கௌதம் மேனனால் நயன்தாராக்கு வந்த புது டார்ச்சர்.. தனுசை விடுங்க தலைவலியால் லேடி சூப்பர் ஸ்டார் செய்த வேலை

நயன்தாரா 20 வருடங்கள் போராடி திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் தனுஷிற்கு எதிராக இவர் விடுத்த ஓ மரியா ஓ மரியாஅறிக்கை தான் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் புரட்டி போட்டது. நயன்தாரா கல்யாணம் ஆவணப்படத்தில், தனுஷ் தயாரித்த பட காட்சிகளை வைத்தது தான் இவர்களுக்குள் பிரச்சனை.

இப்படி ஒரு பக்கம் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நேற்று நயன்தாராவின் நாற்பதாவது பிறந்தநாளை ஒட்டி அவரின் கல்யாண வீடியோ நெட் பிலிக்ஸ் வலைதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த வீடியோ தொகுக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ஒரு பக்கம் இந்த வீடியோவை வெளியிடுவதற்கு பிரச்சனை செய்து வருகிறார். நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக இந்த படத்திற்கான என்ஓசிஅவரிடம் தான் இருக்கிறது. அதை அவர் நிறுவனம் கொடுக்கவில்லை. மறுமுனையில் பிரபல இயக்குனரால் நயன்தாராவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நயன்தாராவின் கல்யாண ஆவண படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கினார். அவரால் இப்பொழுது இந்த படத்திற்கு பிரச்சனை வந்துள்ளது. கௌதம் பல பேரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு படங்களை இயக்காமல் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார். இதனால் அட்வான்ஸ் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்துள்ளனர்.

கௌதம்மேனன் அட்வான்ஸை திரும்ப தரவில்லை என்றால் அவர் இயக்கிய இந்த கல்யாண வீடியோவை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என நயன்தாரா நிறுவனத்திற்கு பல பேர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் இயக்குனர் கௌதம்மேனன் பெயரை போடாமல் வேறு ஒரு பெயரை போட்டு இந்த படத்தை அவசரமாக வெளியிட அனுமதி கொடுத்தது நயன்தாரா தரப்பு.

Trending News