திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் இறங்கும் ஹீரோயின்.. பெட்டிகளை இறக்கி அட்லீ எடுத்த புது அவதாரம்

Director Atlee: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் கொடிகட்டி பறந்த நிலையில் பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். அட்லீ இயக்கம் இப்படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் மற்றொரு தமிழ் நடிகை இறங்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவிலும் நயன்தாராவுக்கு போட்டியாக இருந்த நிலையில் இப்போது பாலிவுட்டிலும் வந்து விட்டார். அதுமட்டுமின்றி இவரையும் ஹிந்தி சினிமாவில் அறிமுகப்படுத்தி வைப்பது அட்லீ தான். இயக்குனராக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அட்லீ இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார்.

Also Read : சின்னத்திரை நயன்தாராவுடன் ஜோடி சேரும் யோகி பாபு.. மண்டேலாவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூறை பிச்சுக்கிட்டு கொட்டுது

அதுவும் பாலிவுட் படத்தை தான் முதலாவதாக தயாரிக்க இருக்கிறார். அவ்வாறு பெட்டியை இறக்கி தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் அட்லீ முதலாவதாக கீர்த்தி சுரேஷை வைத்து படம் எடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் கிட்ட இப்போது பெரிய அளவில் ஸ்கோப் இல்லை. சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

ஆனால் மகேஷ்பாபு உடன் தெலுங்கில் அவர் ஆடிய பாடல் ஒன்று ட்ரெண்டான நிலையில் கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் எகிறி உள்ளது. மேலும் படங்களில் பிசியாக இருந்தாலும் போட்டோ ஷூட் போன்றவற்றிலும் கீர்த்தி சுரேஷ் ஆர்வமாக இருக்கிறார். மேலும் பெரும்பாலும் தெலுங்கு படங்கள் என்றால் கீர்த்தி சுரேஷ் ஆர்வமாக இருக்கிறார்.

Also Read : ஜவானை தொடர்ந்து தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அட்லீ.. தளபதியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

இப்போது நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டில் பிரபல ஹீரோவான வருண் தவான் நடிக்க இருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அட்லீயின் படங்கள் சர்ச்சையை உண்டாக்கினாலும் வசூலில் நல்ல லாபத்தை பெற்று தந்தது.

இப்போது அவரே தயாரிப்பாளராக மாறி உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் மற்ற விவரங்கள் எல்லாம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் பாலிவுட்டிலும் இனி கீர்த்தி சுரேஷ் ஒரு ரவுண்ட் வருவார் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : கண்ணிவெடி வைக்கப் போகும் கீர்த்தி சுரேஷ்.. அறிவிப்புடன் வெளியான புகைப்படம்

- Advertisement -

Trending News