மாடலிங் துறை மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹீரோக்களுக்கு சமமான மாஸ் ரசிகர்களிடம் இவருக்கு இருக்கிறது.
எத்தனை இடர்கள், எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் இவர் அதையெல்லாம் பொருட்படுத்தாது வெற்றியை மட்டுமே பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானதாக அறிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் நயன்தாரா ஸ்கூல் படிக்கும்போது எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் திடீரென்று ட்ரண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா கிராப் கட் ஹேர் ஸ்டைலில் பாய் லுக்கில் இருக்கிறார். இருப்பினும் செம க்யூட்டாக இருக்கும் நயன்தாராவை கவனமாக பார்த்து தான் அடையாளம் கண்டுகொள்கின்றனர்.
நயன்தாரா ஸ்கூல் போட்டோ

இதனால் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து இதில் இருக்கும் கதாநாயகி யார் என்று ஒருவன் மற்றொருடன் கேள்வி கேட்கின்றனர். அத்துடன் நயன்தாரா படித்த பள்ளியும் ரசிகர்களின் கவனம் பெறுகிறது.
நயன்தாரா படித்த பள்ளி

Also Read: குழந்தை பெற்ற பின் முதல் முறையாக மாஸ் ஹீரோ கூட்டணியில் நயன்தாரா.. No.1 இடம் எனக்கு மட்டும்தான்