வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்துக்கு விதை போட்டதே நயன் தான்.. பிரபலம் கொடுத்த பேட்டி

Nayanthara: நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதற்கு காரணமே நயன்தாரா தான் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. தனுஷ் மற்றும் நயன்தாரா நல்ல நண்பர்களாக இருந்தவர்கள், இப்போது சில காரணங்களால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் அதைத்தான் நீ இருவருக்கும் காதல் இருந்ததாக வலைப்பேச்சு சேனல் பிஸ்மி சொல்லி இருக்கிறார். யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் நயன்தாரா கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

விவாகரத்துக்கு விதை போட்டதே நயன் தான்

அதன் பின்னர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருந்தார். அந்தப் பாட்டுக்கு ஆடுவதற்கு நயன்தாரா சம்பளமே வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் நானும் ரௌடி தான் படத்தை தனுஷ் தயாரிக்க அதில் நயன்தாரா தான் ஹீரோயின். இவர்கள் இருவருக்கும் காதல் இருந்திருக்கிறது. தனுஷ் வீட்டில் தெரிந்து பெரிய எதிர்ப்பு கிளம்பி விட்டது. இப்போது தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுக்கு நடுவே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்.

ஆனால் அதற்கு எல்லாம் விதை போட்டது நயன்தாராவின் காதல்தான் என பிஸ்மி சொல்லி இருக்கிறார். மேலும் நயன்தாரா கடவுள் பாதி மிருகம் பாதி என்ற ரகத்தைச் சேர்ந்தவர். யாரடி நீ மோகினி படத்தின் வெற்றியின் போது தனுஷ் நயன்தாராவிடம் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு இந்த படத்தில் வேலை செய்த உதவியை இயக்குனர்கள் எல்லோருக்கும் பைக் வாங்கி கொடுங்க என்று நயன்தாரா சொன்னாராம். நயன்தாராகாக அதை செய்திருக்கிறார் தனுஷ்.

Trending News