திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

பல நாளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் நஸ்ரியா.. யாருக்கு ஜோடி தெரியுமா?

நடிக்க வந்த வேகத்தில் நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் வாங்கியவர் நஸ்ரியா. தமிழ் நாட்டில் இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றளவும், இவர் க்யூட் ரியாக்ஷன்களை ரசிகர்கள் dp வைத்தும் ஸ்டேட்டஸ் வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சொரப்பான படங்கள் நடித்தாலும், ரசிகர்கள் மனதில் தீரா இடம் பிடித்தவர். கேரியரில் உச்சத்தில் இருக்கும்போது அதே வேகத்தில் மலையாள நடிகர் பஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். அப்போது பஹத் ஃபாசிலை ஏராளமானோர் ட்ரோல் செய்து, இவரை போய் திருமணம் செய்திருக்கிறார் என்று விமர்சித்தார்கள்.

ஆனால் அதை எல்லாத்தையும் உடைத்து தற்போது பஹத் ஃபாசில் கேரியரின் உச்சத்தில் இருக்கின்றார். அவருடைய படங்கள் அடுத்தடுத்து வருகின்றன. ஆனால் நஸ்ரியா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறாரே தவிர, வேறு என்ன செய்கிறார், எந்த படம் நடிக்கிறார் என்று எந்த தகவலும் வெளியாகவே இல்லை.

கம் பாக் கொடுக்கும் நஸ்ரியா..

நஸ்ரியா கடைசியாக தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே ‘சுந்தரனிகி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

அவரின் வருகைக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் பசில் ஜோசப்புடன் இணைந்து புதிய மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்திற்கு “சூக்ஷம தர்ஷினி” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடந்து வருகிறது.

Trending News