Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

நஸ்ரியா vs மமீதா பைஜு.. சோசியல் மீடியாவில் அனல் பறக்கும் போட்டி!

நஸ்ரியா vs மமீதா பைஜு.. சோசியல் மீடியாவில் அனல் பறக்கும் போட்டி!

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சீன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார் நடிகை நஸ்ரியா.

இதற்கு முன்பு தமிழில் துறுதுறுப்பான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நஸ்ரியா, இந்தப் படத்தில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளிலும் இறங்கி கலக்கியுள்ளார்.

நீண்ட நாட்களாக அவருடைய நடிப்பைப் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு, அவருடைய இந்த ரீ-என்ட்ரி மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

நஸ்ரியாவின் இடத்தை மமீதா பைஜு ஏற்கனவே நிரப்பிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இதனை ஒப்பிட்டுப் பார்த்து இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து ரீல்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

‘சீன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும், நல்ல கதை அமைந்தால் தனது கணவர் ஃபஹத் பாசிலுடன் கூட இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நஸ்ரியா.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.