திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கவின் வேண்டவே வேண்டாம்.. பிளடி பெக்கராக நெல்சன் தேர்ந்தெடுத்த 2 நடிகர்கள், அப்புறம் என்ன ஆச்சு.?

Kavin: நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஏற்கனவே இதன் முன்னோட்ட வீடியோ சுவாரஸ்யமாக இருந்தது.

அதற்கு முன்பே இப்படத்தில் பிச்சைக்காரராக வரும் கவினின் தோற்றம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் கேரக்டருக்காக அவர் கொடுத்த உழைப்பு அர்ப்பணிப்பு பற்றி பட குழு வாயாரப் புகழ்ந்து வருகின்றனர்.

வரும் தீபாவளியை முன்னிட்டு வெளிவர இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் தற்போது ஜோராக தொடங்கி இருக்கிறது. தயாரிப்பாளராக நெல்சன் படம் சம்பந்தப்பட்ட பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

ப்ளடி பெக்கர் படத்தில் நடிக்க இருந்த 2 ஹீரோக்கள்

அதில் அவர் இப்படத்தில் கவின் தான் ஹீரோ என இயக்குனர் சொன்னதும் முடியாது என மறுத்திருக்கிறார். ஃப்ரெண்ட்ஷிப் வேறு தொழில் வேறு. கவினுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் தனியாக செஞ்சுக்கலாம் இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்க வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.

ஆனால் இயக்குனர் பிடிவாதமாக இருந்து கவினை நடிக்க வைத்தாராம். இத்தனைக்கும் நெல்சன் தனுஷ், விஜய் சேதுபதி இருவரில் ஒருவரிடம் பேசலாம் என ஐடியா சொல்லி இருக்கிறார்.

இருப்பினும் இயக்குனரின் முடிவால் அவர் அமைதியாக இருந்திருக்கிறார். அதன் பிறகு படம் முடிவடைந்து அதை பார்த்ததும் நெல்சன் ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார். தான் எப்படிப்பட்ட ஒரு தவறான முடிவை எடுத்து இருக்கிறோம் என நினைத்தாராம்.

அந்த அளவுக்கு கவின் அருமையாக நடித்து நெல்சனை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதை இப்போது மேடையில் கூறிய நெல்சன் நிச்சயம் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Trending News