வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நெல்சன், லோகேஷ் கதையெல்லாம் கோடு மட்டும் தான்.. 67 வயதிலும் டஃப் கொடுத்த மணிரத்தினம்

Director Mani Ratnam: நாயகன் படத்தில் இணைந்த இயக்குனர் மணிரத்தினம் மற்றும் உலகநாயகன் கமலஹாசனின் கூட்டணி இப்போது 36 வருடத்திற்கு பிறகு கமலின் 234 வது படத்தில் இணைந்து இருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் ‘தக் லைஃப்’ என்பது டீசருடன் நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

இந்த டீசரை பார்க்கும்போது கமலின் மூளையை முறுக்கேற்றும் வகையில் மணிரத்தினம் இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பது தெரிகிறது. ஏனென்றால் இப்போது இருக்கும் இயக்குனர்கள் எல்லாம் ஒன் லைன் ஸ்டோரியை வைத்து தான் கதையை ரெடி பண்ணுகிறார்கள்.

அதிலும் டாப் இயக்குனர்களான நெல்சன், லோகேஷ், ஹெச். வினோத்தின் கதைகளை பார்த்தால் ஒரு கோடு போல் தான் தெரியும். இவர்களெல்லாம் ஒன் லைன் ஸ்டோரியை சொல்லி டாப்  நடிகர்களிடம் ஓகே வாங்கி விடுகிறார்கள். ஆனா மணிரத்தினம் இவர்களை எல்லாம் விட முற்றிலும் வேறுபட்டவர்.

Also Read: சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

முழு படத்தின் கதையை சொல்கிறார், அதில் பிளாஷ் பேக் கண்டிப்பாக இருக்கும். ரியல் லைஃப் ஸ்டோரி கனெக்ட் ஆகும்  வகையில் படத்தின் கதையை எழுதி இருப்பார். முழு கதையை சொல்லி தான் ஒரு நடிகரிடம் ஓகே வாங்குவார்.

67 வயதானாலும் மணிரத்தினத்தின் ஆரம்ப காலகட்ட படங்கள் மட்டுமல்ல இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் கதையிலும் அவருக்கு முன் கதை, பின் கதை  என எல்லா பக்கத்தையும் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று ஸ்டோரியை தயார் செய்திருக்கிறார்.

இதை நாம் நேற்று வெளியான ‘தக் லைஃப்’ படத்தின் ப்ரோமோ வீடியோவில் கமல் இன்ட்ரோ கொடுப்பதிலே தெரிகிறது. இவ்வளவு வயசாகியும் இப்பொழுது உள்ள டிரெண்டை காட்டி, குருவுக்கு எல்லாம் குரு என்று மணிரத்தினம் தன்னை நிரூபித்து காட்டிவிட்டார்.

Also Read: தக் லைஃப்-ல் கமலுக்கு ஜோடியான எவர்கிரீன் ஹீரோயின்.. 19 வருடத்திற்கு முன் உலக நாயகனுக்கு சுளுக்கு எடுத்தவராச்சே

Trending News