திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜெயிலர் 2-ல் பிசியான நெல்சன்.. தூள் கிளப்ப வரும் ப்ரோமோ வீடியோ, எப்ப தெரியுமா.?

Jailer 2: சூப்பர் ஸ்டார் நெல்சன் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் கடந்த வருடம் வெளிவந்தது. அனிருத் இசையில் தாறுமாறான வரவேற்பை பெற்ற இப்படம் 650 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது.

அதன் பிறகு வந்த படங்கள் எதுவும் இந்த வசூலை நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை அடுத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்தது. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இதை அடுத்து ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருந்த நெல்சன் தற்போது அடுத்த கட்ட வேலைக்கு தயாராகி விட்டார். அதன்படி இதன் ப்ரோமோ சூட்டிங் வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

ஜெயிலர் 2 லேட்டஸ்ட் அப்டேட்

அதாவது வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்த ஷூட்டிங் நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளது. அதேபோல் தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று அந்த வீடியோ வெளியாக இருக்கிறது. அதேபோல் அன்றைய தேதியில் இன்னும் பல அப்டேட்டுகள் வர இருக்கிறது.

அதில் கூலி படத்திலிருந்து ஸ்பெஷலான ஒரு சம்பவத்தையும் எதிர்பார்க்கலாம். இப்படியாக சூப்பர் ஸ்டார் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்ய தொடங்கி விட்டார். இதில் வேட்டையன் ஞானவேல், மாரி செல்வராஜ் ஆகியோரும் லைனில் இருக்கின்றனர்.

தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சங்கடத்தில் இருக்கும் ரஜினி நடிப்பின் பக்கம் அதிக கவனம் செலுத்த தொடங்கி விட்டார். நேற்று அவருடைய மகள் ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷிடம் இருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News