வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கொடூர வில்லனாய் நெப்போலியன் கலக்கிய 5 படங்கள்.. வல்லவராயனாய் ரஜினியை படாதபாடுப்படுத்திய எஜமான் படம்

சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடமிருந்து பெயர் வாங்குவது மிகக் கடினம். ஆனால் அப்படி வில்லனாக நடித்து பெயர் வாங்கியவர்களில் ஒருவர் நெப்போலியன். அவர் கொடூர வில்லனாக நடித்து கலக்கிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

பங்காளி: 1992 ஆம் ஆண்டு கே.சுபாஷ் இயக்கத்தில் பங்காளி திரைப்படம் நகைச்சுவையாக வெளிவந்தது. இதில் சத்யராஜ், பானுப்ரியா, நெப்போலியன் மற்றும் கவுண்டமணி நடித்தார்கள். இப்படத்தில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் நெப்போலியன், சொத்துக்காக ஆசைப்பட்டு சத்யராஜை ஒரு ரூமில் அடைத்து விட்டு அவரை பேச முடியாத அளவிற்கு கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டு கொடூர வில்லத்தனத்தை காட்டி இருப்பார்.

Also read: நெப்போலியனின் கண்ணீர் கதை.. இந்த மனுசனுக்குள்ள இவ்வளவு கஷ்டங்களா?

நாடோடி தென்றல்: பாரதிராஜா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான நாடோடி தென்றல் திரைப்படம். இதில் நவரச நாயகன் கார்த்திக், ரஞ்சிதா மற்றும் நெப்போலியன் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நெப்போலியன் கார்த்திக் அப்பாவாக நடித்திருப்பார். இதில் மகன் காதலிப்பதை தெரிந்து கொண்டு காதலை பிரிப்பதற்காக வில்லத்தனமாக சில விஷயங்களை செய்து வருவார்.

இது நம்ம பூமி: பி.வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு இது நம்ம பூமி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கார்த்திக், குஷ்பு மற்றும் நெப்போலியன் நடித்திருந்தார்கள். இதில் இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் நடக்கும் பிரச்சினைக்கு இடையில் நெப்போலியன் வில்லத்தனத்தை காட்டி அவர்களை நிரந்தரமாக பிரிப்பதற்காக படாத பாடு பட்டிருப்பார்.

Also read: நடிப்பில் கல்லா கட்ட முடியல, பிசினஸில் இறங்கிய 5 ஹீரோக்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் நடிக்க மறுத்த நெப்போலியன்

புது நெல்லு புது நாத்து: பாரதிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம். இப்படத்தில் ராகுல், சுகன்யா, பொன்வண்ணன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் நெப்போலியன் அவர்களுக்கு முதல் படமாக அமைந்தது. அவர் நடித்த முதல் படத்திலேயே வில்லன் ஆக நடித்திருந்தாலும் அவர் நடிப்பை பெரிய அளவில் பேசும் படி நடித்திருப்பார்.

எஜமான்: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு எஜமான் வெற்றி திரைப்படமாக வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், மீனா மற்றும் நெப்போலியன் நடித்தார்கள். இது நெப்போலியன் வல்லவராயன் என்ற கதாபாத்திரத்தில் பொண்ணுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ரஜினிகாந்துக்கு எதிர்மறையான விஷயங்களை மிக மோசமான முறையில் செய்து ரஜினிகாந்தை படாத பாடு படுத்தி இருப்பார். ஆனால் இந்தப் படத்தில் நெப்போலியன் கதாபாத்திரம் ரஜினிகாந்துக்கு இணையாக பேசப்பட்டது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இதற்கு ஒரு காரணம் நெப்போலியனின் வில்லத்தனமான நடிப்பு என்று கூட கூறலாம்.

Also read: அமெரிக்கா வரை விஜய் பெயரை பங்கம் பண்ணும் நெப்போலியன்.. தேரை இழுத்து தெருவுல விட்ட சம்பவம்

Trending News