Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஹாப்பி பர்த்டே சியான்.. 58 வயது நடிப்பு அரக்கன் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு

ஹாப்பி பர்த்டே சியான்.. 58 வயது நடிப்பு அரக்கன் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு

Actor Vikram’s Networth: சிவாஜி, கமல் வரிசையில் நடிப்பு அரக்கனாக புதுப்புது கேரக்டர்களை தேடி தேடி நடித்து வருகிறார் விக்ரம். இன்னும் சொல்லப்போனால் உசுர கொடுத்து நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தற்போது இவர் நடிப்பில் உருவாகி […]

Actor Vikram’s Networth: சிவாஜி, கமல் வரிசையில் நடிப்பு அரக்கனாக புதுப்புது கேரக்டர்களை தேடி தேடி நடித்து வருகிறார் விக்ரம். இன்னும் சொல்லப்போனால் உசுர கொடுத்து நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் விரைவில் வெளிவர உள்ளது. அதேபோல் சியான் 62 படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படி பிசியாக இருக்கும் விக்ரம் இன்று தன்னுடைய 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 32 வருடங்களாக தோல்வி, கஷ்டம் என பலவற்றை கடந்து இன்று வெற்றி நாயகனாக இருக்கும் இவருடைய சொத்து மதிப்பு பற்றி இங்கு காண்போம்.

விக்ரமின் சொத்து மதிப்பு

அதன்படி விக்ரம் தற்போது ஒரு படத்திற்காக 30 முதல் 45 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும் சென்னையில் இவருக்கு சொந்தமாக சில வீடுகள் இருக்கிறது.

அதிலும் தற்போது அவர் இருக்கும் வீடு ஜிம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் உள்ளது. அதே போல் இவரிடம் porsche 922 turbo, audi q 7 என பல லேட்டஸ்ட் மாடல் கார்கள் உள்ளன.

இதன் மதிப்பு மட்டுமே ஏழு கோடியை தாண்டும் என்கின்றனர். அது மட்டுமின்றி சென்னையை தாண்டி பல இடங்களிலும் இவருக்கு சொத்துக்கள் இருக்கிறது.

அதன்படி தற்போது வரை விக்ரம் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு 250 கோடி ஆகும். இப்படியாக நடிப்பின் மீது தீரா காதல் கொண்ட சியானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.