திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

5 பலான படங்களை தட்டி தூக்கிய நெட் பிளிக்ஸ்.. படுக்கையறை காட்சிகளில் கண் கூச வைக்கும் மில்க் நடிகை

Netflix: கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகாத போது ஓடிடி-யில் தான் டாப் நடிகர்களின் படங்கள் கூட வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. ஆனால் இப்போது ஒரு படம் ரிலீஸ் ஆனால் சில நாட்களிலேயே ஓடிடி-யிலும் வெளியாகிறது. அதிலும் முன்னணி ஒடிடி நிறுவனமான நெட் பிளிக்ஸ் போட்டி போட்டுக் கொண்டு படங்களை கைப்பற்றுகிறது. அதிலும் 5 பலான படங்களை தட்டி தூக்கி இருக்கிறது. இதில் மில்க் பியூட்டியின் படுக்கையறை காட்சிகள் நிறைந்த படம் பார்ப்பதற்கே கண் கூசும் வகையில் உள்ளது.

சீ(she): ஆரிஃப் அலி மற்றும் அவினாஷ் தாஸ் ஆகியோர் இயக்கத்தில் ஆதிதி போஹங்கர், விஜய் வர்மா நடிப்பில் வெளியான குற்றவியல் கதை பின்னணியைக் கொண்ட வெப் சீரிஸ் தான் சீ(she). இதில் அப்பாவியாக இருக்கும் கதாநாயகி போலீஸ் கொடுக்கும் டார்ச்சலாலும் குடும்ப சூழ்நிலையாலும் பலான தொழில் செய்ய முடிவு செய்கிறார். இதில் படுக்கையறை காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கும். இந்தப் படத்தை நெட் பிளிக்ஸ் தான் ஸ்ட்ரீமிங் செய்தது.

Also Read: இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

பேய்(ghoul): பேட்ரிக் கிரஹாம் எழுதி இயக்கிய இந்த திரில்லர் வெப் சீரிஸ் நெட் பிளிக்ஸில் வெளியானது. இதில் ராதிகா ஆப்தே, மானவ் கவுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் எதார்த்தத்தை விட்டுவிட்டு கொடூரமான காட்டினர். இந்தப் படத்தை பார்க்கும் போதே பதை பதைக்க வைத்த அளவுக்கு அடுத்தடுத்த மர்மமான கொலைகள் நிகழ்கிறது. இந்தப் படத்தின் உரிமையையும் நெட் பிளிக்ஸ் தான் கைப்பற்றி ரிலீஸ் செய்தது.

பீட்டால்(beetal): இந்த வெப் சீரிஸ் ஒரு தொலைதூர கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இந்திய ஜாம்பி திகில் நிறைந்ததாக இருந்தது. இதனை பேட்ரிக் கிரஹாம் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் தேசிய விருது பெற்ற நிகில் மகாஜனால் இணைந்து இயக்கியுள்ளார். வினீத் குமார் சிங், அஹானா கும்ரா, சுசித்ரா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த 2020 ஆம் ஆண்டு இந்த வெப் சீரிஸ் நெட் பிளிக்ஸில் ரிலீஸ் ஆனது.

Also Read: வந்தாச்சு காவாலா முழு HD வீடியோ பாடல்.. அடுத்த வசூலுக்கு அடி போட்ட சன் பிக்சர்ஸ்

பார்ட் ஆஃப் பிளட் (Bard of blood): இது 2019 ஆம் ஆண்டு வெளியான உளவியல் திரில்லர் கதை களத்தைக் கொண்ட வெப் சீரிஸ். இதனை ரிபு தாஸ் குப்தா இயக்கி மற்றும் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்தது. இதில் இம்ரான் ஹஷ்மி, கீர்த்தி குல்ஹாரி, வினீத் குமார் சிங், ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஏழு எபிசோடுகள் இருக்கும். இது ஒரு முன்னாள் IIW ஏஜென்ட்டின் கதை தான் படத்தின் மையக்கரு. இதில் படம் முழுக்க துப்பாக்கி சத்தங்களும் வன்முறைகளும் நிரம்பி இருக்கும். இந்த தொடர் 2019ல் நெட் பிளிக்ஸில் திரையிடப்பட்டது.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: பால்கி, கொன்கனா சென் ஷர்மா, சுஜய் கோஷ் மற்றும் அமித் ஷர்மா போன்ற நான்கு இயக்குனர்கள் தனி தனி கதையாக லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலாஜியை இயக்கி இருக்கின்றனர். இது சமீபத்தில் பிளிக்ஸில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி செம ஹிட் ஆனது. இதில் கஜோல், தமன்னா, விஜய் வர் மிருணாள் தாக்கூர், விஜய் வர்மா, நீனா குப்தா, அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அதிலும் மில்க் பியூட்டி இதில் படுக்கையறை காட்சிகளிலும் லிப்லாக் காட்சிகளிலும் கண் கூசும் அளவுக்கு நடித்து இளசுகளை திணறடித்துள்ளார். இவர் மட்டுமல்ல வயதான நபருடன் பலான காட்சிகளில் மிருணாள் தாக்கூர் அசால்டாக நடித்து வியக்க வைத்தார்.

Also Read: ஜெயிலருக்கு அதிர்ஷ்ட தேவதையாக கொட்டிக் கொடுத்த நடிகை.. கடைசியா ஒண்ணுமே இல்லாமல் வெறும் கையில் நிற்கும் பரிதாபம்

Trending News