ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

லைக்காவை காப்பாற்றிய நெட்பிலிக்ஸ்.. அஜித் கொடுத்த லாஸ்ட் வார்னிங்

விடாமுயற்சி படத்தின் டீசர் எல்லாம் ஜோராக வெளிவந்துவிட்டது, ஆனால் படம் வெளி வருவதில் தான் ஒரேடியாக தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அஜர்பைஜானில் நடைபெற்ற சூட்டிங்கில் ஏகப்பட்ட பிரச்சனைகள். அதனால் ஒரு கட்டத்தில் மொத்தமாய் அஜித்திற்கு இந்த படத்தின் மீது ஆர்வம் இல்லாமல் போனது.

இப்பொழுது பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்தே ஆகவேண்டும், இல்லை என்றால் விடாமுயற்சி படத்தை வாங்க மாட்டோம் என நெட்பிலிக்ஸ் அறிவித்ததனால் இந்த படம் 2025 பொங்கல் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டது.. ஆனால் இப்பொழுதும் இயக்குனர் மகில் திருமேனி பிரச்சனை செய்து வருகிறார்.

இந்த படத்திற்கு இன்னும் 25 நாட்கள் பேட்ச் ஒர்க் மற்றும் ஷூட்டிங் வேண்டுமென லைக்காவிடம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொங்கலுக்கு ரிலீசெய்ய வேண்டும் 40 நாட்கள் தான் இருக்கிறது என ஆடிப் போன லைக்கா நிறுவனம் பிரச்சனையை நெட்பிலிக்ஸ் மற்றும் அஜித்திடம் கொண்டு போய் உள்ளது.

அஜித் ஒரு பக்கம் குட் பேட் அக்லி ஷூட்டிங்கிலும் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் மகிழ் திருமேனி பேட்ச் ஒர்க் மற்றும் சில காட்சிகள் எடுப்பதற்காக தாய்லாந்து போக வேண்டும் என்றும் கூறியுள்ளார். அஜித் அதற்கெல்லாம் சம்மதிக்கவில்லை. இறுதியாக பத்து நாட்கள் கால் சீட் கொடுத்து இருக்கிறார்.

அஜித் கொடுத்த 10 நாட்களுக்குள் தாய்லாந்து சூட்டிங் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது. இப்பொழுது படக்குழுவினர் தாய்லாந்து புறப்பட உள்ளனர். அஜித் அங்கே ஐந்து நாட்கள் சூட்டிங்கில் பங்கு கொள்கிறார். பொங்கலுக்கு ரிலீசாகிறதோ இல்லையோ ஆனால் இந்த வேலைகள் முடித்த பிறகு தான் விடாமுயற்சிக்கு விடிவு காலம்

Trending News