வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இதெல்லாம் ஒரு Strategy-ஆ, அசிங்கமா இல்லையா.! ஆனந்தியை கழுவி ஊற்றும் ஆர்மி

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் டிவியில் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது.

ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, அருண் பிரசாத், விஜே விஷால், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், கானா ஜெஃப்ரி, அர்னவ், அன்ஷிகா, ஆர் ஜே ஆனந்தி, தீபக், உள்ளிட்ட சுமார் 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், முதல் வாரத்தில் ரவீந்தரும், இரண்டாம் வாரத்தில் அர்ணவும் வெளியேறியுள்ளனர்.

அடுத்த வாரம், சௌந்தர்யா, தர்ஷா குப்தா, அல்லது அருண் குமார் வெளியேற்ற பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில், சாச்சனா திடீரென வயிற்று வலியால் துடிக்க, பதறிய ஆண்கள் அவருக்கு உதவிகரமாக இருந்துள்ளார்.

இதெல்லாம் ஒரு strategy ஆ?

பிக் பாஸ் இந்த சீசனின் விதிப்படி ஆண்கள் அனுமதியின்றி கோட்டை தாண்டி செல்லக்கூடாது. ஆனால் சாச்சனாவுக்கு திடீரென வயிற்று வலி எடுக்க, அங்கு அத்தனை பெண்கள் இருந்தும் அவருக்கு ஆறுதலாக ஆண்களே இருந்தனர். இந்த நிலையில், சாச்சனாவை confession ரூம் க்கு அருண் குமார் அழைத்து சென்றார். அதனால் அவரும் கோட்டை தாண்டி செல்ல நேரிட்டது.

இந்த நிலையில், உதவும் எண்ணத்தோடு கோட்டை தாண்டிய அருண் குமாரை புரிந்துகொள்ளாமல், “அருண் டிராப் பண்றதுக்கு இது என்னடா. அருணும் கன்பெஷன் ரூமுக்கு போனதால் டீல் கேன்சல் பண்ணப்படுகிறது” என்று அறிவிக்கிறார். அதற்கு, “அருண் மட்டும் போதும் உங்களுக்கு ஆப்பு வைக்கிறதுக்கு” என சுனிதா சொல்கிறார்.

இது பார்ப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதெல்லாம் ஒரு strategy ஆ என்று மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலர், ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய போனவரை இப்படி பண்ணுகிறாய்.. உனக்கு அசிங்கமாக இல்லையா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எது எப்படியாக இருந்தாலும், இது தவறான ஒரு முன்னுதாரணமாகவே தோன்றுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அருண் ஒரு வகையில் அப்பாவி தான். ஒருவரின் உண்மையான குணத்தை வெளிக்கொண்டு வருவது தான் பிக் பாஸ் வீடு. ஆனால் இப்போதெல்லாம், நல்லவர்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இடமில்லை என்பதுபோல தான் தெரிகிறது.

பிக் பாஸ் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக டாக்ஸிக் ஹவுஸ் என்று பெயர் வைத்திருக்கலாம்.

Trending News