புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வசமாக சிக்கிய ஜோதிகா, உங்க பூமர் வேலை எல்லாம் தமிழ்நாட்டில் தானா?. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Jyotika: இந்தியாவின் எந்த மொழிக்கு போனாலும் ஜோதிகா கண்டெண்டு கொடுத்துக்கொண்டே இருப்பார் போல. அவருக்கு தமிழ்நாடு கசந்து விட்டதா, இல்லை தமிழ் ரசிகர்களுக்கு தான் அவர் கசந்து விட்டாரா என தெரியவில்லை.

எப்போ மும்பைக்கு குடி போனாரோ, அதில் இருந்து ஜோதிகா மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய பாலிவுட் ஆசையால் கணவர் சூர்யாவையும் அந்த பக்கத்திற்கு இழுக்கிறார் என செய்திகளும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள். மற்ற மொழி படங்கள் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்ததும் தமிழ் சினிமாவில் என்னை யாரும் மதிக்கவில்லை என பொத்தாம் பொதுவாக ஒரு பேட்டியை கொடுத்தது தான் இதற்கு எல்லாம் காரணம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஜோதிகா ஓட்டு போடவில்லை என்பது அவர் மீது பெரிய விமர்சனமாக வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் அம்பானி வீட்டில் விசேஷத்திற்கு பேசும் பொருளாகிவிட்டது.

உங்க பூமர் வேலை எல்லாம் தமிழ்நாட்டில் தானா?

அதில் என்ன பஞ்சாயத்து என்று பார்த்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் பிளாஷ்பேக் போய் ஒரு சில விஷயங்களை தோண்டி எடுத்து விட்டார்கள். ராட்சசி பட சமயத்தில் தஞ்சாவூரில் கோயிலுக்கு இவ்வளவு செலவு பண்ணுவதற்கு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு செலவு பண்ணலாம் என பேசியிருந்தார்.

ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலை தான் ஜோதிகா இப்படி விமர்சிக்கிறார் என அப்போது பல எதிர்ப்புகள் இருந்தது. ஒரு சிலரே ஜோதிகாவை எதிர்த்தாலும், பலரும் ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

இப்போ முகேஷ் அம்பானி பையன் கல்யாண வீட்டுக்கு போன ஜோதிகாவிடம் மேடம் உங்க அறிவுரையை அங்க சொல்லலையா என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் இணையவாசிகள்.

இவ்வளவு கோடிகள் செலவு பண்ணி திருமணம் செய்வதற்கு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டலாமே என முகேஷ் அம்பானிக்கு அறிவுரை சொல்ல வேண்டியது தானே, மும்பைக்கு போனதும் அப்படியே மாறிட்டீங்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், வடநாட்டுக்கு போன பெண் வாயை பொத்திக்கொண்டு அவர்களின் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டீர்களா என காரசார விமர்சனங்களையும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

Trending News