வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மண்ணுளிப் பாம்ப வித்துட்டாங்க செட்டியார்.. சதுரங்க வேட்டையை வைத்து கோப்ராவை கலாய்த்த நெட்டிசன்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி செட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கோப்ரா. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கோப்ரா படம் பூர்த்தி செய்யவில்லை.

anniyan-memes-cobra
anniyan-memes-cobra

சமீபகாலமாக வெளியாகும் படங்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக தொடர்ந்து ட்ரோல் செய்யப்படுகிறது. வலிமை, பீஸ்ட் போன்ற படங்களும் இவ்வாறு ஹாலிவுட் படத்திலிருந்து காட்சிகள் சுடப்பட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இதற்கு கோப்ரா படமும் விதிவிலக்கு இல்லை.

Also Read : கோப்ரா பட தோல்வியை அன்றே கணித்த விஜய்.. பாம்பு ரொம்ப நேரம் படம் எடுத்தா கீறி கிட்ட தோத்து போகும்

கோப்ரா படத்தில் விசாரணை காட்சி ஒன்றில் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்தக் காட்சியில் நடிகர் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரது உடல் மொழியை விக்ரம் பேசி காண்பிப்பார். இந்த காட்சிக்கு திரையரங்குகளில் கை தட்டல் கிடைத்தது.

cobra-memes
cobra-memes

இந்நிலையில் ஹாலிவுட்டில் இன்சைட் என்ற குறும்படத்தில் இருந்து இந்த காட்சி காப்பியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த காட்சியில் தன்னை சுற்றி உள்ளவர்கள் போலவே அவர் உடல் மொழியை மாற்றி மாற்றி பேசி அசத்து இருப்பார். இது தவிர கோப்ரா படத்திற்கு ஏகப்பட்ட மீம்ஸ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Also Read : OTT வியாபாரத்திற்காக கோப்ரா தயாரிப்பாளர் செய்த காரியம்.. கெஞ்சி வாங்கிய தணிக்கை சான்றிதழ்

ஹெச் வினோத் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படத்தில் மண்ணுளிப் பாம்பை கோபுரான்னு சொல்லி ஏமாத்தி வித்திருக்கானுங்க செட்டியார் என்ற வசனத்தை போட்டு கோப்ரா படத்தை ட்ரோல் செய்துள்ளனர்.


Netizens are making fun of the Cobra movie with the dialogue from sathuranga vettai

கோப்ரா படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதால் விக்ரம் ரசிகர்களின் கோரிக்கை ஏற்று தற்போது 20 நிமிட காட்சியை படக்குழு நீக்கி உள்ளனர். அந்த காட்சிக்கு செலவிட்ட நேரம், பணமும் வீண் என அதற்கும் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Also Read : தோல்வியை ஒப்புக் கொண்ட கோப்ரா படக்குழு.. முன்னாடியே இத பண்ணியிருந்தா தல தப்பி இருக்கும்

Trending News